நிதானம்!

சந்திர தேவ் மகரிஷியிடம் அருணனும், பால கோவிந்தும் சீடர்களாக இருந்தனர். இருவரும் பலசாலிகள்! புத்திசாலிகள்! இருப்பினும் பால கோவிந்த் சற்று நிதானமானவன். அருணனோ துடுக்குத்தனம் நிறைந்தவன்!.
நிதானம்!

சந்திர தேவ் மகரிஷியிடம் அருணனும், பால கோவிந்தும் சீடர்களாக இருந்தனர். இருவரும் பலசாலிகள்! புத்திசாலிகள்! இருப்பினும் பால கோவிந்த் சற்று நிதானமானவன். அருணனோ துடுக்குத்தனம் நிறைந்தவன்!...பால கோவிந்தைவிட தான் கெட்டிக்காரன் என்று நிரூபிக்க வேண்டும் என்று அருணன் விரும்பினான்.  பாலகோவிந்தோ எப்போதும் புன்சிரிப்புடன் தன் கடமையைச் செய்துவந்தான்.  

சந்திர தேவ் மகரிஷி  இதை அறிந்துகொண்டார்.

ஒருநாள் அவர், ""ஹே,... அருணா!...ஹே....பாலகோவிந்த்!....இருவரும் இங்கே வாருங்கள்!...'' என  சீடர்களை அழைத்தார். இருவரும் அவர் முன் வந்து நின்றனர். 
""எனக்கு இன்று ஏனோ அதிகமாகப் பசிக்கிறது......அதோ! அந்த மரத்திலிருந்து 
பழங்களைப் பறித்துவாருங்கள்...'' என்றார். 

உடனே அருணனும், பாலகோவிந்தும் பழங்களைப் பறிக்க விரைந்தனர். ஆனால் மரத்தை நெருங்க முடியவில்லை....மரத்தைச் சுற்றி முட்புதர்கள் இருந்தன. 

எப்படியும் ரிஷியிடம் நற்பெயர் வாங்கிவிட வேண்டும் என நினைத்த அருணன் சற்றே பின்னோக்கி வந்து பின்னர் முன்னோக்கி வேகமாக ஒடிக் குதித்து மரத்தைப் பிடித்துக் கொண்டு ஏறிவிட்டான்.  பழங்களை முடிந்த அளவுக்குப் பறித்தான். பின் மரத்திலிருந்து குதித்தான் முட்புதரினால் உடலில் காயங்கள் ஏற்பட்டன. அதைப் பொருட்படுத்தாமல்  வேகமாக ஓடி குருவிடம் பழங்களை அளித்தான். 

பாலகோவிந்தோ, ஒரு அரிவாளை எடுத்து வந்து முட்செடிகளை வெட்டினான்.

மரத்தின் அருகே செல்லும்படி வசதி செய்தான். இதற்கு சில நிமிடங்கள் ஆகிவிட்டன....அப்போது சில வழிப்போக்கர்கள் வந்தனர். அவர்கள் மரத்தை பாலகோவிந்த அமைத்த பாதை வழியே மரத்தை அடைந்தனர்.  பழங்களைப் பறித்துச் சாப்பிட்டனர்.  மரத்தடியில் படுத்து இளைப்பாறினர். பாலகோவிந்தும் சில பழங்களைப் பறித்துக் கொண்டான். பறித்த பழங்களை சந்திரதேவ் மகரிஷியிடம் தந்தான். 

அருணன் கொடுத்த பழங்களைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் ரிஷி! அருணனுக்குப் பெருமை பிடிபடவில்லை!

மகரிஷி அருணைப் பார்த்து, ""உன் வேகமும்,,  சாமர்த்தியமும் அருமை! ஆனால் நீ மிகவும் அவசரபுத்தியுடன் செயல்பட்டிருக்கிறாய்....உடலில் காயம் வேறு! .... பாலகோவிந்தைப் பார்....அவன் பொறுமையினால் எனக்கு மட்டுமல்ல....வழிப்போக்கர்களுக்கும் அல்லவா பசியாற்றிவிட்டான்!... பொறுமையின் பயன் பலரைச் சென்று அடையும்...அருணா, குழந்தாய்!...வெறும் வேகம் மட்டும் போதாது! சற்றே நிதானமாக சிந்தித்து செயல் படுவாய்!''

அருணனுக்கு இப்போதெல்லாம் பால கோவிந்தனிடம் பொறாமை என்பதே இல்லை. இருவரும் மிகச் சிறந்த சீடர்களாக புன்சிரிப்புடன் கல்வி கற்கின்றனர். புன்னகையுடன் பணிகளைச் செய்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com