அங்கிள் ஆன்டெனா

இரட்டைத் தலை உள்ள பாம்புகூட இருக்கிறது என்கிறார்களே, உண்மையா?
 அங்கிள் ஆன்டெனா

கேள்வி: இரட்டைத் தலை உள்ள பாம்புகூட இருக்கிறது என்கிறார்களே, உண்மையா?

பதில்: எப்போதாவது நடக்கும் அதிசய.ம் இது. இரட்டைத் தலை பாம்பு உண்மையிலேயே இருக்கத்தான் செய்கிறது. படத்தைப் பாருங்கள்..

அமெரிக்காவிலுள்ள வடக்கு விர்ஜினியா பகுதியில், ஒரு பண்ணை வீட்டுக்காரர்கள் இந்தப் பாம்பு தங்கள் வயல்வெளியில் சுறுசுறுப்பாகச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்து, ஆராய்ச்சியாளர்களுக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து, அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

இந்த இரட்டைத்தலை பாம்பை, பல நாட்கள் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அதற்கு இரண்டு மூளைகளும், ஒரு இதயமும், ஒரு நுரையீரலும் இருப்பதைக் கண்டறிந்தார்கள்.

இரண்டு தலைகளுக்கும் தங்களுக்குத் தேவயான இரையைக் கவ்விப் பிடிக்கும் திறன் இருந்தது. அதிலும் இடது பக்கத் தலைக்கு இந்தத் திறன் மிகவும் அதிகமாக இருந்ததாம்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com