அங்கிள் ஆன்டெனா

பல நாடுகளில் பீதியைக் கிளப்பும் பறவைக் காய்ச்சல் நோய் எப்படி மனிதனுக்குப் பரவுகிறது?
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: பல நாடுகளில் பீதியைக் கிளப்பும் பறவைக் காய்ச்சல் நோய் எப்படி மனிதனுக்குப் பரவுகிறது?

பதில்: சீனா, தாய்லாந்து, கொரியா போன்ற கிழக்காசிய நாடுகளையும் நமது பக்கத்து நாடான பாகிஸ்தானையும் அலற வைத்த பறவைக் காய்ச்சலுக்கு "புளூ ஜுரம்' என்பது பொதுவான பெயர். இதற்கு வேறு வகையான நாமகரணமும் 
அவ்வப்போது வைப்பது உண்டு.

15 வகையான வைரஸ் கிருமிகளால் இந்த நோய் பரவுகிறது. அதிலும் முதன்மையான வைரஸின் பெயர் ஏள் ச1 என்பதுதான்!

இது பயங்கர வீரியம் கொண்ட வைரஸாக இருந்தபோதும் மனிதனை நேரடியாகத் தாக்குவதில்லை. கோழி போன்ற பறவைகளைத்தான் இது பாதிக்கிறது. இந்த வைரஸ் தாக்கிய பறவைகள் உணவாக மாறும்போது, அதன் அதைச் சாப்பிடும் மனிதனின் உடலில் வைரஸ் நுழைகிறது. இந்த வைரஸ் மெல்ல உரு மாறி புதிய அவதாரம் எடுக்கிறது. இதுதான் மனிதனைக் கடுமையாகப் பாதிக்கிறது. இதனால் பறவை சார்ந்த சமாசாரங்களை இறக்குமதி செய்ய நமது அரசு தடை விதித்து விட்டது. இதனால் நம் நாட்டுக்குள் இந்த வைரஸ் நுழைவது மிகக் கடினம். இருந்தாலும் கோழி இறைச்சி போன்வற்றை நன்றாக வேக வைக்கும்போது இந்தக் கிருமி அழிந்து விடும். ஆகவே பயப்பட வேண்டாம். இருந்தாலும் காதோடு ஒரு ரகசியம் சொல்கிறேன்... சைவமாக மாறி விடுங்களேன். எதற்கு வீணாக ரிஸ்க் எடுக்க வேண்டும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com