மாயாஜால பாணியில் ஹாலிவுட் சினிமா!

2015-ஆம் ஆண்டு வெளியான ʻGoosebumpsʼ வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்ற படம்.  தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. 
மாயாஜால பாணியில் ஹாலிவுட் சினிமா!

2015-ஆம் ஆண்டு வெளியான ʻGoosebumpsʼ வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்ற படம்.  தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. 

மாயாஜால கதைகளை அலசும் புத்தகங்களிலிருந்தோ, ஒரு பழமையான பொருளிலிருந்தோ ஒரு பூதமோ, விசேஷ குணாதிசயங்கள், விசித்திரமான வடிவமைப்புகள் கொண்ட கற்பனைக் கதாபாத்திரங்கள் உயிர்த்தெழுந்து உலா வரும் அதி அற்புத காட்சிகளைப் பல படங்களில் பார்த்திருப்போம். அந்த வகையில் இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.  

அந்த வகையில்  "GOOSEBUMPS' , "HAUNTED HALLOWEEN'  படம்  உருவாகியுள்ளது. பழைமையானதொரு  மாளிகையில்,  "ஹாண்டட் ஹாலோவீன்'  என்கிற ஒரு புராதன புத்தகமொன்றைக் காண்கிறார்கள். பக்கங்களைப் புரட்டும் போது ஸ்லாப்பி  என்கிற உயிரினத்தைத் தெரியாத்தனமாக வெளியேறி விடச் செய்கிறார்கள். நாச வேலைகளில் இறங்க முற்படும் அதனைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் சோனி, சாம், ஸ்டைன் மற்றும் சோனியின் சகோதரி சாரா க்யூன் ஆகிய அனைவரும் இணைந்து செயல்களத்தில் குதிக்கிறார்கள். பின் நடந்தது என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்லுவதே படம்.  

ஆரி சாண்டல் இயக்குகிறார், டாமினிக் லூயிஸ் இசையமைக்கிறார். பேரி பீட்டர்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் இப்படம் வரும் 26-ஆம் தேதி தமிழில் வெளியாகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com