மெது வடையும் டோநட்டும்!

டச் மக்களால்  அமெரிக்காவுக்கு  அறிமுகப்படுத்தப்பட்டது.  எனக்கென்னவோ டச் மக்கள் 500  ஆண்டுகளுக்கு முன்  இந்தியா  வந்திருந்தபோது அன்று இங்கு இருந்த மக்கள், மெது வடை சாப்பிட்டதைப்  பார்த்திருக்க வேண்டும்.
மெது வடையும் டோநட்டும்!

டச் மக்களால்  அமெரிக்காவுக்கு  அறிமுகப்படுத்தப்பட்டது.  எனக்கென்னவோ டச் மக்கள் 500  ஆண்டுகளுக்கு முன்  இந்தியா  வந்திருந்தபோது அன்று இங்கு இருந்த மக்கள், மெது வடை சாப்பிட்டதைப்  பார்த்திருக்க வேண்டும்.  அதே வடையை  டச் மக்கள், ரொட்டியில்  உருவாக்கி  அதற்கு டோநட் எனப் பெயரிட்டனர்.  நாம் அன்று  எப்படி வடை போட்டோமோ  அதேபோன்று தான் இப்பவும் வடை போட்டுக்  கொண்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்கர்கள் அப்படிஇருப்பார்களா? அதன்  மீது ஒரு பக்கத்தில்  சர்க்கரையைத் தூவினர். பாலாடையை  ஏற்றினர்.  ஐஸ்கீரிமை இறக்கினர். பிறகு அவற்றை உலகம் முழுவதும் இன்று அறிமுகப்படுத்தி  விட்டனர்.

அமெரிக்காவில் இன்று 15 விதமான டோநட்கள் மிகவும் பிரபலம். கூடுதலாக சாக்லெட் கலவையும் சேர்க்கப்பட்டது, பலன் குழந்தைகளுக்கு  பிடித்துப்போக, இன்று உலகில் மிகவும் விரும்பப்படும்  டோநட்டாக  சாக்லெட்  டோநட் உள்ளது.

ஸ்டிராபெர்ரி ஈஸ்ட் டோநட்டுகளும் விற்பனையில் சக்கைப் போடு போடுகின்றன.  உறைபனி நிலையில் பழங்கள், முட்டை,  உலர் பழங்கள் என பலவற்றை  இணைத்தும் டோநட்கள் ரெடி.

1800-ஆம் ஆண்டு  வாக்கிலேயே  அமெரிக்காவில் டோநட் இருந்துள்ளது.

இதற்கு ஆதாரம்  1809-இல்   வாஷிங்டன் இர்வின் எழுதி  வெளியிட்ட  THE HISTORY OF NEWYORK என்ற புத்தகம்.  அதில் டோநட்   பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று நாம் காணும் டோநட்டை  1847-இல் ஹென்சன்கிரகரி  என்பவர்  உருவாக்கி  அறிமுகப்படுத்தினார்.

உலக அளவில் டோநட்டை  மிகவும் விரும்பி சாப்பிடும்  மக்களில்  முதல் இடம் கனடா  மக்களுக்கு இரண்டாவது இடம் ஜப்பானியர்களுக்கு.

இதுவரை  மிக அதிக டோநட்களை  சாப்பிட்ட  பெருமைக்குரியவர்  ஜேம்ஸ் மெக்டோனல்ட்.

இவர் 60 டோநட்டுகளை 1728 விநாடிகளில்  சாப்பிட்டு சாதனை   செய்தார்.

உலகின்  மிக விலை  உயர்ந்த  டோநட்  தங்க இழை ஐசிங் செய்யப்பட்ட டோநட்.  இது  சுமார் 1200 டாலருக்கு 2017-இல்  விற்பனை செய்யப்பட்டது. இதன் பெயர் கோல்டன்  கிரிஸ்டல்.

பிலிப்பைன்ஸில் 2000 டோநட் கடைகளும், ஜப்பானில் 1500  டோநட் கடைகளும் உள்ளன.

இந்தியாவில்  மூன்று டோநட் பிராண்ட்கள் பிரபலமாக உள்ளன.

அவை: மேட் ஓவர் டோநட்ஸ், டன்கின் டோநட்ஸ்,  க்ரிஸ்பி க்ரீமி ஆகியவை. இதில் மேட் ஓவர் டோநட்ஸ்  சிங்கப்பூரைத்  தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. 10 வருடங்களுக்கு முன் இந்தியாவில்  தன் முதல் கிளையை தொடங்கிய  அதற்கு இன்று 55 கிளைகள்  உள்ளன.  மும்பை, பெங்களூரு, தில்லி, புனே  என முக்கிய  நகரங்களில் இதன் கிளைகள்  உள்ளன. இவற்றில்  முட்டை  சேர்க்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com