பேல்பூரி

சிகை வெட்டும் சிற்பி
பேல்பூரி


கண்டது

(மதுரை வில்லாபுரத்தில் ஒரு முடித்திருத்தகத்தின் பெயர்)

சிகை வெட்டும் சிற்பி

டி.கே.ஹரிஹரன், மதுரை.

(தஞ்சை மாவட்ட படைப்பாளர்கள் சங்க அலுவலத்தில் கண்ட வாசகம்)

எழுத்தால் உலகத்தைப் படைப்போம்
உலகத்தையே எழுத்தால் படிப்போம்.

தா.ஜெசிமா பர்வின், கரம்பயம்.

(புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

எரிச்சி

ப.விஸ்வநாதன், கீரமங்கலம்.

கேட்டது

(திருவாரூர் திருமண மண்டபத்தில் இருவர்)

""என்ன சார் வடையை அல்வாவுல  தொட்டுத் திங்குறீங்க?''
""ஏன் தின்னா என்ன? ஆறின வடையை சூடான அல்வாவுல தொட்டு தின்னு பாரு. ருசி தெரியும்.  இந்த மாதிரி காம்பினேஷனை இங்குதான் சாப்பிட முடியும்.  ஓட்டல்லயோ...  வீட்டுலயோ... சாப்பிட முடியாது.''

பரதன், திருவாரூர்.

(திண்டுக்கல் - எரியோடு பஸ்ஸில் இருவர்)

""என் மனைவி வந்த பிறகுதான் இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்''
""எதெல்லாம்?''
""ஆயிரம் ரூபாய்க்கு செருப்பு, பத்தாயிரம் ரூபாய்க்கு சேலையெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன்''

எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.


யோசிக்கிறாங்கப்பா!


மரக்கிளையில் அமரும் பறவை
கிளை உடைந்துவிடும் என அஞ்சுவதில்லை.
அதன் நம்பிக்கை கிளையில் இல்லை...
அதன் சிறகில் உள்ளது.

அ.பூங்கோதை, செங்கல்பட்டு.



மைக்ரோ கதை


ஒருவர் விமானநிலையத்துக்குப் போன் செய்தார். ""இங்கேயிருந்து சிங்கப்பூருக்கு போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?''  என்று கேட்டார்.  வேறு வேலையில் கவனமாக இருந்த விமானநிலைய ஊழியர், ""ஒரு நிமிஷம்''  என்றார். 

""இவ்வளவு சீக்கிரமாகக் கூட சிங்கப்பூருக்குப் போக முடியுமா?''  என்று சந்தேகத்துடன் போனை வைத்துவிட்டார் அவர்.

நெ.இராமன், சென்னை-74.

எஸ்.எம்.எஸ்.


ஆண் பாலாகப் பிறந்ததற்குப் பதிலாக
ஆவின் பாலாகப் பிறந்திருந்தால்...
மனைவிக்கு முன் தைரியமாகப் பொங்கியிருக்கலாம்.

சுகந்தாராம்,  சென்னை-59


அப்படீங்களா!


நெதர்லாந்தின்  ஆம்ஸ்டர்டாம் நகரில் அண்மையில் "உலகக் கட்டுமானத்துறை திருவிழா' நடைபெற்றது.  அப்போது சிங்கப்பூரில் உள்ள முதியோர் குடியிருப்பு கட்டடம் ஒன்றை 2018 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த கட்டடம் என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அப்படியென்ன அந்தக் கட்டடத்தில் உள்ளது?

இந்தக் கட்டடத்தில் பல தளங்கள் உள்ளன. தரைக்கு அடியில் உள்ள திறந்தவெளி தளத்தில்  உடற்பயிற்சி செய்யும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம், பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவை உள்ளன.  மத்திய தளப் பகுதியிலோ மருத்துவ மையங்கள் உள்ளன. கட்டடத்தின் மேல்தளத்தில் முதியோர் வசிக்கும் பகுதி உள்ளது. பச்சைப்பசேல் என்று செடிகளும், சிறு மரங்களும் இந்த மேல்தளத்தில் உள்ளன. முழுக்குடியிருப்பும் இந்த பசுமையான தாவரங்களால் போர்த்தப்பட்டு உள்ளன. நல்ல காற்று, வெளிச்சம், தூய்மை என அங்கே வாழ்பவர்களுக்கு உடல், மன நலனைக் கொடுக்கும் இந்தக் குடியிருப்பை ரஞஏஅ என்ற புகழ்பெற்ற சிங்கப்பூர் கட்டுமான நிறுவனம் உருவாக்கியுள்ளது.

என்.ஜே., சென்னை-116.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com