செவ்வாய்க்கிழமை 11 டிசம்பர் 2018

மருந்து தேவைக்காக ரூ.3.60 கோடி ஒதுக்கீடு: மாநில சுகாதாரத் துறை

DIN | Published: 28th November 2018 01:43 AM


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்குவதற்கு இதுவரை ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கஜா புயல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் விரிவாக மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, 132 நடமாடும் மருத்துவ வாகனங்கள், 130 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். 
அவ்வாறு இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை முதல்கட்டமாக ரூ.2.20 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது கூடுதலாக ரூ.1.40 கோடி வழங்கப்பட உள்ளது. தேவைப்படும்பட்சத்தில் மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More from the section

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி: சந்திரசேகர ராவுக்கு ராமதாஸ் வாழ்த்து 
ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! 
நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா..?
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி: சந்திரசேகர ராவுக்கு ராமதாஸ் வாழ்த்து
ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர் வைகோ: திருமாவளவன்