ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

 தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.

நீதிபதி தருண் அகர்வால் குழு சமர்பித்துள்ள அறிக்கையில், குழு ஆய்வு செய்த இடத்தில் 3.5 லட்சம் மெட்ரிக் டன் தாமிரக் கழிவுகள் பட்டா நிலம் எனக் கூறப்படும் இடத்தில் கொட்டப்பட்டுள்ளது எனவும், அக்கழிவுகளை 12 மீட்டர் உயரம் வரை குவித்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கு மேல் கொட்டப்படும் தாமிரக் கழிவுகள் விதி மீறலுக்கு வழி வகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவே நிலத்தடி நீர் மாசுபாட்டுக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுவாகவே தமிழகத்தின் நிலத்தடி நீரின் டிடிஎஸ் அதிகமாகவும், பெரும்பாலும் உப்புத்தன்மையுடனும் காணப்படுகிறது. குறிப்பாக, கடலுக்கு அருகில் தூத்துக்குடி இருப்பதால், நிலத்தடி நீரில் டிடிஎஸ் அளவு அதிகமாகக் காணப்படுகிறது. தவிர, ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசு அடையவில்லை. எனவே, ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசாணைக்கு எதிரான மேல்முறையீட்டை பசுமைத் தீர்ப்பாயம் விசாரிக்க வேண்டும் வேதாந்தா குழுமம் சார்பில் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆலைக்கு தேவையான மின்சாரம் வழங்குவது, ஆலை இயக்கம் தொடர்பாக 3 வார காலத்திற்குள் புதிய வழிமுறைகளை தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் ஏற்படுத்துவது, ஆலைக் கழிவுகளைக் கண்காணிக்க தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை இந்த தீர்ப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது. 

கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com