அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள் செயல்பட வேண்டும்:  அமைச்சர் டி.ஜெயக்குமார்

அர்ப்பணிப்பு உணர்வோடும், ஈடுபாட்டுடனும் மருத்துவ மாணவர்கள் செயல்பட்டால்தான் மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்ற இயலும் என்று மாநில மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள் செயல்பட வேண்டும்:  அமைச்சர் டி.ஜெயக்குமார்


அர்ப்பணிப்பு உணர்வோடும், ஈடுபாட்டுடனும் மருத்துவ மாணவர்கள் செயல்பட்டால்தான் மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்ற இயலும் என்று மாநில மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையினர்களுக்கான உயிரி நெறி முறை கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: தங்களுக்கு எத்தகைய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன, எவை மறுக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளும் உரிமை அனைத்து நோயாளிகளுக்கும் உள்ளது. எனவே, மருத்துவ சிகிச்சைகளில் வெளிப்படைத்தன்மை அவசியம். சமகால இளைஞர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும். 
சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உழைக்க வேண்டும். குறிப்பாக மருத்துவ மாணவர்களுக்கு அத்தகைய பண்புகள் அதிகம் இருப்பது அவசியம். அப்போதுதான் அவர்கள், மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகள் அளிக்க முடியும் என்றார் அவர்.
முன்னதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி பேசுகையில், மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே நல்லதொரு உறவு நீடிக்க வேண்டும்; என்றார்.
இந்தக் கருத்தரங்கில், யுனெஸ்கோவின் ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான உயிரி நெறியியல் பிரிவு தலைவர் ரசூல் பிராங்கோ டிúஸாசா, பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) பரமேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com