துளிகள்...

இங்கிலாந்து கவுண்டி ஆட்டங்களில்ஸ்பாட் பிக்ஸிங் புகார் தொடர்பாக தடை செய்யப்பட்டுள்ள சுழற்பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா மீது மீண்டும் விசாரணை நடத்த

*இங்கிலாந்து கவுண்டி ஆட்டங்களில்ஸ்பாட் பிக்ஸிங் புகார் தொடர்பாக தடை செய்யப்பட்டுள்ள சுழற்பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா மீது மீண்டும் விசாரணை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தீர்மானித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக இக்குற்றச்சாட்டை மறுத்து வந்த கனேரியா அண்மையில் தவறு நடைபெற்றதை ஒப்புக் கொண்டார். கனேரியாவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
*அபுதாபி டெஸ்ட்டில் 17 விக்கெட் எடுத்து ஆஸி. அணியை நிலைகுலையச் செய்த பாக். வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் ஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசையில் 14-ஆம் இடத்தில் இருந்து முன்னேறி 3-ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். அவருக்கு முன்பு இங்கிலாந்து ஜேம்ஸ் ஆண்டர்சன், தென்னாப்பிரிக்கா ரபாடா முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.
*சீனாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏடிபி நிங்போ சேலஞ்சர் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-7, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் தாமஸ் பேபியானாவிடம் தோல்வி கண்டு இரண்டாம் இடம் பெற்றார்.
*ஆஸி. மகளிர் ஏ அணி-இந்திய மகளிர் ஏ அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 ஆட்டம் மும்பையில் திங்கள்கிழமை தொடங்குகிறது. மூன்று ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் இந்திய மகளிர் அணியின் மூத்த வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். நவம்பரில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் இத்தொடர் நடைபெறுகிறது.
*புணேயில் நடைபெறவுள்ள ஆசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்க சுஷாந்த், அர்சிதா உள்பட 7 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com