உலக மல்யுத்த சாம்பியன் போட்டி: இறுதிச் சுற்றில் பஜ்ரங் புனியா

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை முதன்முறையாக வெல்லும் முனைப்பில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
உலக மல்யுத்த சாம்பியன் போட்டி: இறுதிச் சுற்றில் பஜ்ரங் புனியா

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை முதன்முறையாக வெல்லும் முனைப்பில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
 காமன்வெல்த், ஆசிய போட்டியில் மல்யுத்தத்தில் தங்கம் வென்றுள்ள பஜ்ரங் புனியா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் 65 கிலோ அரையிறுதியில் கியூபாவின் அலெஜான்ட்ரோ என்ரிக்கை 4-3 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வென்று இறுதிச் சுற்றுக்கு நுழைந்தார்.
 காலிறுதியில் மங்கோலியாவின் துல்கா துமுரை 5-3 என வென்ற புனியா, கடந்த 2013 உலக சாம்பியன போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார்.
 உலக சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற ஓரே வீரர் சுஷில்குமார் (2010 மாஸ்கோ) ஆவார். நடப்பு உலக சாம்பியன் போட்டியில் பஜ்ரங் தங்கம் வென்றால், காமன்வெல்த், ஆசியப் போட்டி என நடப்பு சீசனில் பெரிய போட்டிகளில் பட்டம் வென்ற சாதனையை படைப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com