இரு தரப்பு கிரிக்கெட் தொடர்கள் செலவுக்கு கட்டுப்பாடு: ஐசிசி வலியுறுத்தல்

இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களின் போது ஏற்படும் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என உறுப்பு நாடுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வலியுறுத்தியுள்ளது.

இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களின் போது ஏற்படும் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என உறுப்பு நாடுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வலியுறுத்தியுள்ளது.
 ஐசிசி வாரியக் கூட்டம் சிங்கப்பூரில் சனிக்கிழமை நிறைவடைந்தது. இதில் கிரிக்கெட் ஆட்டத்தில் நிலவும் சிக்கல்கள், சீராக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
 இரு தரப்பு தொடர்களுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஒரு நாட்டுக்கு தொடரில் விளையாட செல்லும் அணி பெரியளவில் உள்ள நிலையில் மொத்த செலவுகளையும், போட்டியை நடத்தும் நாட்டு கிரிக்கெட் வாரியமே செய்கிறது. இதனால் அந்த வாரியமும் நிதிச்சிக்கலுக்கு ஆளாகிறது. இதனால் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டு, பார்வையாளர் எண்ணிக்கையும் குறைகிறது.
 எனவே இரு தரப்பு தொடர்களில் ஏற்படும் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும். இரு தரப்பு சுற்றுப்பயணம் தொடர்பான ஒப்பந்தத்தை துரிதமாக செய்து கொள்ள வேண்டும். வரும் 2023-இல் இந்தியாவில் நடக்கவுள்ள ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் 13 அணிகள் பிரிவில் இருந்து 8 அணிகள் தேர்வு பெறும். 12 முழு உறுப்பினர்கள், நெதர்லாந்து இதில் அடங்கும். பெண்கள் கிரிக்கெட் மேலும் வளர தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
 ஐசிசி நடுவர் தேர்வு குழுவில் ஜெப் அல்லாடைஸ், ரஞ்சன் மடுகல்லே, டேவின் பூன், சஞ்சய் மஞ்ச்ரேகர் இடம் பெறுவர். ஊழல் தடுப்பு மேற்பார்வைக் குழுவின் தலைவராக டேவிட் ஹெüமன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி மகளிர் குழுவையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com