சச்சின் சாதனைகளை நெருங்கும் கோலி: 36-வது சதம் அளிக்கும் ஆச்சர்யங்கள்!

தனது 36-வது ஒருநாள் சதத்தை எடுக்க கோலிக்கு 204 ஒருநாள் இன்னிங்ஸ் தேவைப்பட்டுள்ளன. அதே 36 ஒருநாள் சதங்களை எடுக்க சச்சின் டெண்டுல்கருக்கு...
சச்சின் சாதனைகளை நெருங்கும் கோலி: 36-வது சதம் அளிக்கும் ஆச்சர்யங்கள்!

5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் குவஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஒரு நாள் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்களை குவித்தது. ஷிம்ரன் ஹெட்மயர் அபாரமாக ஆடி 106 ரன்களை விளாசினார். பின்னர் ஆடிய இந்தியா 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 326 ரன்களை எடுத்து வென்றது. ரோஹித் சர்மா 152, கோலி 140 ரன்களைக் குவித்தனர்.

விராட் கோலி 140 ரன்கள் 

- 36-வது ஒருநாள் சதம்
- சேஸிங்கில் 22-வது ஒருநாள் சதம்
- இந்தியாவில் எடுத்துள்ள 15-வது ஒருநாள் சதம்
- கேப்டனாக அவர் எடுத்துள்ள 14-வது ஒருநாள் சதம்
 - மே.இ. அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் சதம்

* தனது 36-வது ஒருநாள் சதத்தை எடுக்க கோலிக்கு 204 ஒருநாள் இன்னிங்ஸ் தேவைப்பட்டுள்ளன. அதே 36 ஒருநாள் சதங்களை எடுக்க சச்சின் டெண்டுல்கருக்கு 311 இன்னிங்ஸ் தேவைப்பட்டன.

விராட் கோலியின் பேட்டிங் சராசரி

54.57 - டெஸ்டுகள்
58.69 - ஒருநாள் போட்டிகள்
48.88 - டி20 போட்டிகள்

அதிக ஒருநாள் சதங்கள்

சச்சின் - 49 (452 இன்னிங்ஸ்)
கோலி - 36 (204)
பாண்டிங் - 30 (365)
ஜெயசூர்யா - 28 (433)
ஆம்லா - 26 (166)

அதிக சதங்கள் (டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றும் சேர்த்து)

சச்சின் - 100
பாண்டிங் - 71
சங்கக்காரா - 63
காலிஸ் - 62
கோலி - 60

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக மூன்று வருடங்களிலும் 2000 ரன்கள் எடுத்த வீரர்கள்

சச்சின் - 2234, 2011, 2541 (1996, 1997, 1998)
ஹேடன் - 2038, 2349, 2069 (2002, 2003, 2004)
ஜோ ரூட் - 2228, 2570, 2092 (2015, 2016, 2017)
விராட் கோலி - 2595, 2818, 2098* (2016, 2017, 2018) 

(தொடர்ச்சியாக இரு வருடங்கள் 2000+ ரன்கள் எடுத்த ஒரே கேப்டன் - கோலி)

சேஸிங்கில் அதிக ஒருநாள் ரன்கள்

சச்சின் டெண்டுல்கர் - 8720 ரன்கள் (232 இன்னிங்ஸ், சராசரி 42.33)
விராட் கோலி - 6032 ரன்கள் (116 இன்னிங்ஸ், சராசரி 68.54)
ஜெயசூர்யா -  5742 ரன்கள் (210 இன்னிங்ஸ், சராசரி 29.44) 

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக 200+ ரன்கள் கூட்டணி அமைத்தவர்கள்

5 - விராட் கோலி - ரோஹித் சர்மா 
3 - சச்சின் டெண்டுல்கர் - கங்குலி 
3 - விராட் கோலி - கெளதம் கம்பீர் 

ஒரு வருடத்தில் அதிகமுறை 2000+ சர்வதேச ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் 

5 சச்சின் டெண்டுல்கர் 
5 விராட் கோலி 
4 செளரவ் கங்குலி 
3 ராகுல் டிராவிட் 
1 விரேந்தர் சேவாக் / கெளதம் கம்பீர்

ஒரு வருடத்தில் அதிகமுறை 2000+ சர்வதேச ரன்கள் எடுத்த வீரர்கள்

6 சங்ககாரா 
5 சச்சின் டெண்டுல்கர்
5 ஜெயவர்தனே
5 விராட் கோலி

2013 முதல் அதிக ஒருநாள் சதங்கள்

கோலி - 23 (116 இன்னிங்ஸ்)
ரோஹித் சர்மா - 18 (102 இன்னிங்ஸ்)
ஆம்லா - 16 (106 இன்னிங்ஸ்)
தவன் - 15 (105 இன்னிங்ஸ்)

கேப்டனாக அதிகச் சதங்கள் எடுத்த வீரர்கள்

ரிக்கி பாண்டிங் - 22 ஒருநாள் சதங்கள் (220 இன்னிங்ஸ்)
கோலி - 14 ஒருநாள் சதங்கள் (50 இன்னிங்ஸ்)

3-ம் நிலை வீரராக அதிக ஒருநாள் சதங்கள்

கோலி - 29 சதங்கள் (152 இன்னிங்ஸ்)
பாண்டிங் - 29 சதங்கள் (335 இன்னிங்ஸ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com