ஆஸி. அணி அபார பந்துவீச்சு: கடுமையாகப் போராடும் விராட் கோலி & புஜாரா

இந்திய அணி 2-வது நாள் தேநீர் இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது...
ஆஸி. அணி அபார பந்துவீச்சு: கடுமையாகப் போராடும் விராட் கோலி & புஜாரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 2-வது நாள் தேநீர் இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. 

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக பெர்த்தில் 2-வது டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் ஹாரிஸ் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா, 4 விக்கெட்டுகளையும் பூம்ரா, உமேஷ் யாதவ், விஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்கள். 

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முரளி விஜய் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ராகுல், ஹேஸில்வுட் பந்தில் 2 ரன்கள் போல்ட் ஆனார். இதனால் 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. இதன்பிறகு ஜோடி சேர்ந்த விராட் கோலி - புஜாரா மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆஸி. அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் அதற்கேற்றாற்போல ஆட்டத்தை மாற்றினார்கள். தடுப்பாட்டத்தை நன்கு வெளிப்படுத்தினார்கள். 32-வது ஓவரில் லயன் பந்துவீச்சில் விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்தார். 22 ஓவர்களுக்குப் பிறகு இந்திய அணிக்குக் கிடைத்த முதல் பவுண்டரி அது. எனில் எந்தளவுக்கு நெருக்கடியான தருணங்களை இருவரும் எதிர்கொண்டார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.

2-வது நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 37, புஜாரா 23 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com