இஷாந்தின் நோ பால் பிரச்னை குறித்து விராட் கோலி பேட்டி!

முதல் டெஸ்ட் முடிந்தபிறகு நோ பால் பிரச்னையால் தன் மீதே கோபத்தில் இருந்தார் இஷாந்த் சர்மா...
இஷாந்தின் நோ பால் பிரச்னை குறித்து விராட் கோலி பேட்டி!

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக நாளை பெர்த்தில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் நடக்கிறது. 

முதல் டெஸ்டில் நோ பால்கள் வீசியதால் இஷாந்த் சர்மாவுக்குக் கிடைக்கவேண்டிய சில விக்கெட்டுகள் கிடைக்காமல் போயின. இதனால் இந்திய அணிக்குப் பெரிதாகப் பிரச்னை ஏற்படாமல் போனாலும் இஷாந்த் சர்மா போன்ற மூத்த வீரர் ஒருவர் நோ பால்கள் வீசி வருகிற விக்கெட்டுகளை வீணடிக்கலாமா என்கிற விமரிசனங்கள் எழுந்துள்ளன. 

2-வது டெஸ்டுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, இந்த விவகாரம் குறித்துக் கூறியதாவது:

முதல் டெஸ்ட் முடிந்தபிறகு நோ பால் பிரச்னையால் தன் மீதே கோபத்தில் இருந்தார் இஷாந்த் சர்மா. அதைச் சரிசெய்யவேண்டும் என்று அவரே நினைக்கிறார். எனவே நாங்கள் அதைப் பற்றி அவரிடம் மீண்டும் மீண்டும் பேசவேண்டியதில்லை. அவர் பொறுப்பான கிரிக்கெட் வீரர். நீண்ட காலம் விளையாடி வருகிறார். அணியில் உள்ளவர்கள் போலவே அவரும் தன்னிடம் சரிசெய்யவேண்டியது என்ன என்று தெரிந்துவைத்துள்ளார். எனவே அதுகுறித்து அவரிடம் பேசவேண்டியதில்லை. தன்னிடமுள்ள பிரச்னையை அவர் நன்கு அறிவார், அதைச் சரிசெய்யும் ஆர்வத்தில் உள்ளார் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com