லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் வெற்றி

ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல்கணக்கில் ஹியுஸ்கா அணியை வீழ்த்தியது.
லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் வெற்றி


ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல்கணக்கில் ஹியுஸ்கா அணியை வீழ்த்தியது.
ஐரோப்பிய சாம்பியனான ரியல் மாட்ரிட் கடந்த 5 ஆட்டங்களில் பெறும் நான்காவது வெற்றி இதுவாகும். காரேத் பேல் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் அடித்த ஓரே கோலே வெற்றி கோலாக மாறியது.
இதன் மூலம் லா லிகா பட்டியலில் ரியல் மாட்ரிட் 4-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
லெவன்டே-எய்பார் அணிகள் இடையிலான ஆட்டம் 4-4 என டிராவில் முடிந்தது. ரியல் பெட்டிஸ் 2-0 என ராயோ வாலேகனோவையும், ரியல் வல்லாடோலிட் 2-1 என ரியல் சோசிடேடையும் வென்றன. பார்சிலோனா அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிவர் பிளேட் அணி அபார வெற்றி: மாட்ரிட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கோபா லைபர்டாடோரஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரிவர் பிளேட் அணி 3-1 என்ற கோல்கணக்கில் போகா ஜூனியர்ஸ் அணியை வென்று பட்டத்தை கைப்பற்றியது.
ஆர்ஜென்டீனாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் வன்முறையால் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டு இறுதியில் 6000 மைல்கள் தூரமுள்ள மாட்ரிட் நகருக்கு மாற்றப்பட்டது. கடந்த 2015-இக்கு பின் ரிவர் பிளேட் மீண்டும் பட்டத்தை வென்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com