செய்திகள் சில வரிகள்...

செய்திகள் சில வரிகள்...


* சிஏ லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கணுக்காலில் காயமடைந்த இளம் ஓபனர் பிரித்வி ஷா முதல் டெஸ்டில் இடம் பெறவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பெர்த்தில் வரும் வெள்ளிக்கிழமை இரண்டாவது டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில் பிரித்வி ஷா அடிலெய்ட் மைதானத்தில் ஓடி பயிற்சி மேற்கொண்டார். அவர் 26-ஆம் தேதி மெல்போர்ன் டெஸ்ட்டுக்கு அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.

* ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, ரஞ்சி கோப்பைக்கான பரோடா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வரும் 14-ஆம்தேதி மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பரோடா அணி மோதுகிறது. இதில் ஹார்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் காயமடைந்த பாண்டியா, ஆஸி. சுற்றுப்பயணத்தில் இடம்பெறவில்லை.

* ஐ-லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் ரியல் காஷ்மீர் அணி-ஷில்லாங் லஜோங் அணியுடன் மோதுகிறது. ஏற்கெனவே சொந்த மைதானத்தில் இந்தியன் ஆரோஸ், அய்ஸால் அணிகளை ரியல் காஷ்மீர் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com