உலகக் கோப்பை ஹாக்கி: காலிறுதியில் இங்கிலாந்து, பிரான்ஸ்

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதிக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
வெற்றி மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்.
வெற்றி மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்.


உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதிக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
கடந்த நவ. 28-ஆம் தேதி புவனேசுவரத்தில் 14-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
16 அணிகள் இடம் பெற்ற 4 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் மூன்று சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜெர்மனி உள்ளிட்டவை நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன.
இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்ற அணிகள் கிராஸ் ஓவர் பிரிவுக்கு தகுதி பெற்றன. இதன்படி இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் கிராஸ் ஓவர் ஆட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. 
முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்து தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் 25-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பில் ரோபர் அனுப்பிய பாஸை பெற்ற வில் கால்னன் அற்புதமாக கோலாக்கினார். 
முதல் பாதி நிறைவில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. 
இரண்டாம் பாதி ஆட்டத்திலும் நியூஸி வீரர்களால் கோலடிக்கும் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. இங்கிலாந்தின் தற்காப்பு அரண் வலுவாக இருந்ததால் அவர்கள் கோல் வளையத்தை நெருங்க முடியவில்லை. அதே நேரத்தில் இங்கிலாந்து பார்வர்டுகள் அடிக்கடி நியூஸி கோல் பகுதியில் ஊடுருவினர்.
இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தன. 44-ஆவது நிமிடத்தில் லூக் டெய்லர் தனது அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுத் தந்தார். இறுதியில் 2-0 என்ற கோல்கணக்கில் வென்ற இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியது.
ஒலிம்பிக் சாம்பியன் ஆர்ஜென்டீனாவை வரும் புதன்கிழமை காலிறுதி ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. நியூஸிலாந்து அணி போட்டியில் இருந்து சோகத்துடன் வெளியேறியது.
சீனாவை வென்றது பிரான்ஸ் (1-0): இரு அணிகள் இடையிலான இரண்டாவது கிராஸ் ஓவர் ஆட்டம் இரவு நடைபெற்றது. ஒலிம்பிக் சாம்பியன் ஆர்ஜென்டீனாவுக்கு அதிர்ச்சி அளித்த உற்சாகத்தோடு பிரான்ஸ் இந்த ஆட்டத்தில் பங்கேற்றது. காலிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் தொடக்கம் முதலே தங்கள் ஆட்டத்தை தீவிரப்படுத்தின. எனினும் கோலடிக்கும் முயற்சிகள் பலன தரவில்லை. முதல் பாதி ஆட்டம் 0-0 என கோலின்றி முடிந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் பிரான்ஸ் தனது ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. 
இதன் பலனாக 36-ஆவது நிமிடத்தில் பிரானிக்கி கடத்தி தந்த பந்தை அற்புதமாக கோலாக்கினார் டிமோத்தி கிளமென்ட். இதனால் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. பதிலுக்கு சீன அணி கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இறுதியில் 1-0 என வெற்றி பெற்று பிரான்ஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றது.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை காலிறுதியில் எதிர்கொள்கிறது பிரான்ஸ். 

இன்றைய ஆட்டம்
கிராஸ் ஓவர்
பெல்ஜியம்-பாகிஸ்தான், 
மாலை 4.45.
நெதர்லாந்து-கனடா, 
இரவு 7.00.
நேரடி ஒளிபரப்பு: 
ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டி.டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com