இந்திய அணிக்கு பாராட்டு மழை

அடிலெய்ட் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக பிசிசிஐ சிஓஏ வினோத் ராய், தற்காலிக தலைவர் சிகே.கன்னா ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


அடிலெய்ட் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக பிசிசிஐ சிஓஏ வினோத் ராய், தற்காலிக தலைவர் சிகே.கன்னா ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வினோத் ராய்: விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி, ஒருங்கிணைந்த வெற்றியை ஈட்டியுள்ளனர். சிறந்த அணியின் ஒட்டுமொத்த முயற்சி, தொடர்ந்து வெற்றிகளை குவிப்பர். கடந்த 2003-04 அடிலெய்ட், 2007-08-இல் பெற்ற வெற்றிகளைப் போல் இது சிறப்பானது. ரிஷப் பந்த்தின் உலக சாதனையும் பாராட்டுக்குரியது என்றார்.
சி.கே. கன்னா: இந்த வெற்றி என்பது வரும் நாள்களுக்கானது என்பதில் சந்தேகமில்லை. கடந்த 70 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் ஒரு தொடரின் முதல் டெஸ்டில் இந்தியா வென்றுள்ளது மேலும் சிறப்பானது. விராட் கோலி அணியின் வெற்றி பெருமை மிக்கது. தொடரையும் வென்று வரலாறு படைப்போம் என நம்புகிறேன்.
செளரவ் கங்குலி: இது மிகச்சிறப்பான வெற்றி, கடும் போட்டி, சவால் நிறைந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி, அனைத்து ஆட்டங்களிலும் முடிவு கிடைக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com