வெள்ளிக்கிழமை 14 டிசம்பர் 2018

200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்!

By எழில்| DIN | Published: 06th December 2018 02:37 PM

 

அபுதாபியில் கடந்த 3-ம் தேதி தொடங்கிய 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த நியூஸிலாந்து, முதல் இன்னிங்ஸில் 116.1 ஓவர்களில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் பிலால் ஆசிஃப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள நியூஸிலாந்து அணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

4-வது நாளான இன்று வில்லியம் சோமர்வில்லியின் விக்கெட்டை பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா வீழ்த்தினார். இது அவருடைய 200-வது டெஸ்ட் விக்கெட். 33-வது டெஸ்டிலேயே 200-வது விக்கெட்டை எடுத்ததன் மூலம் 82 வருடச் சாதனையைத் தகர்த்துள்ளார் யாசிர் ஷா. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாரி கிரிம்மெட் 36 டெஸ்டுகளில் நிகழ்த்திய சாதனையை அதைவிடவும் குறைவான டெஸ்டுகளில் நிகழ்த்தி சாதித்துள்ளார்.

குறைந்த டெஸ்டுகளில் 200 விக்கெட்டுகள்

யாசிர் ஷா - 33 டெஸ்டுகள்
கிளாரி கிரிம்மெட் - 36 டெஸ்டுகள்
அஸ்வின் - 37 டெஸ்டுகள்

Tags : Yasir Shah 200 Test wickets

More from the section

உலகக்கோப்பை ஹாக்கி தொடர்: காலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து இந்தியா வெளியேற்றம்
வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ்: உலகின் நெ.1 வீராங்கனையை வென்றார் பி.வி.சிந்து!
உலகின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் சாதனையைக் குறி வைக்கும் 12 வயது சென்னைச் சிறுவன்!
பெர்த் டெஸ்ட்: அதே 11 வீரர்களுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி! 
இஷாந்தின் நோ பால் பிரச்னை குறித்து விராட் கோலி பேட்டி!