வெள்ளிக்கிழமை 14 டிசம்பர் 2018

புஜாரா சதமும் ஆஸி.யின் அசத்தல் பந்துவீச்சும்: முதல் நாள் ஹைலைட்ஸ்!

By எழில்| DIN | Published: 06th December 2018 02:12 PM

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதமடித்து இந்திய அணியைப் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியுள்ளார் புஜாரா.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடர் அடிலெய்டில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார்.

முதல் நாளின் முடிவில் இந்திய அணி, 87.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்துள்ளது. ஷமி 6 ரன்களுடன் களத்தில் உள்ளார். 153 பந்துகளில் அரை சதத்தை எட்டிய புஜாரா, பிறகு 231 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலிய மண்ணில் அவர் எடுத்துள்ள முதல் சதம் இது. 16-வது டெஸ்ட் சதம்.

ஆஸ்திரேலிய அணியின் பிரதான பந்துவீச்சாளர்களான ஸ்டார்க், ஹேஸில்வுட், கம்மின்ஸ், லயன் ஆகிய நால்வரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.

 

More from the section

உலகக்கோப்பை ஹாக்கி தொடர்: காலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து இந்தியா வெளியேற்றம்
வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ்: உலகின் நெ.1 வீராங்கனையை வென்றார் பி.வி.சிந்து!
உலகின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் சாதனையைக் குறி வைக்கும் 12 வயது சென்னைச் சிறுவன்!
பெர்த் டெஸ்ட்: அதே 11 வீரர்களுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி! 
இஷாந்தின் நோ பால் பிரச்னை குறித்து விராட் கோலி பேட்டி!