வியாழக்கிழமை 13 டிசம்பர் 2018

அதிக வருவாய் ஈட்டும் வீரர்கள்: ரூ.228 கோடியுடன் கோலி முதலிடம்

DIN | Published: 06th December 2018 12:50 AM


நடப்பு ஆண்டில் இந்தியாவில் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் வரிசையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இந்த ஆண்டு அவரது ஒட்டுமொத்த வருவாய் ரூ.228.09 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி, ஃபோர்ப்ஸ் இந்தியா பந்திரிக்கையானது இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் தனிநபர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ.235.25 கோடியுடன் முதலிடத்தில் தொடர்கிறார். அந்தப் பட்டியலில் அவருக்கு அடுத்தபடியாக ரூ.228.09 கோடி வருவாயுடன் 2-ஆவது இடத்தில் உள்ளார் கோலி. இப்பட்டியலில் உள்ள இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளை கணக்கில் கொண்டால், அந்த வரிசையில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி கோலி முன்னணியில் இருக்கிறார். 
அவரது கடந்த ஆண்டு வருவாயுடன் (ரூ.100.73 கோடி) ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வருவாயானது இரட்டிப்புக்கும் கூடுதலான மதிப்பில் அதிகரித்துள்ளது. இந்தப் பட்டியலில் தோனி ரூ.101.77 கோடியுடன் 5-ஆவது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் ரூ.80 கோடி வருவாயுடன் 9-ஆவது இடத்தில் உள்ளார்.
இவர்கள் தவிர, பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ரூ.36.5 கோடி, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ரூ.31.49 கோடி, ஹார்திக் பாண்டியா ரூ.28.46 கோடி, ரவிச்சந்திரன் அஸ்வின் ரூ.18.9 கோடியுடன் அந்த வரிசையில் இடம்பிடித்துள்ளனர்.
 

More from the section

உலகக்கோப்பை ஹாக்கி தொடர்: காலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து இந்தியா வெளியேற்றம்
வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ்: உலகின் நெ.1 வீராங்கனையை வென்றார் பி.வி.சிந்து!
உலகின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் சாதனையைக் குறி வைக்கும் 12 வயது சென்னைச் சிறுவன்!
பெர்த் டெஸ்ட்: அதே 11 வீரர்களுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி! 
இஷாந்தின் நோ பால் பிரச்னை குறித்து விராட் கோலி பேட்டி!