தமிழக வரலாற்றில் பெரம்பலூர்

தமிழக வரலாற்றில் பெரம்பலூர் - ஜெயபால் இரத்தினம்; பக்.572; ரூ.700; விச்சி பதிப்பகம், 255, டிஏ/57ஏ, முதன்மைச்சாலை, சாமியப்பா நகர், பெரம்பலூர்-621212.
தமிழக வரலாற்றில் பெரம்பலூர்

தமிழக வரலாற்றில் பெரம்பலூர் - ஜெயபால் இரத்தினம்; பக்.572; ரூ.700; விச்சி பதிப்பகம், 255, டிஏ/57ஏ, முதன்மைச்சாலை, சாமியப்பா நகர், பெரம்பலூர்-621212.
 பெரம்பலூர் வட்டாரத்தின் வரலாற்றைச் சொல்லும் இந்நூலில், முதலில் பெரம்பலூர் பகுதியின் நிலவியலமைப்பு விவரிக்கப்படுகிறது.
 பழைய கற்காலத்திலேயே பெரம்பலூர் வட்டாரத்தில் மக்கள் பரவி வாழத் தொடங்கிவிட்டதையும், புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்படைக் காலங்களில் ஊர்கள் உருவாகிவிட்டதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
 சங்க காலத்தில் இவ்வட்டார நிலப்பரப்பில் விச்சி, கண்டீரம் மற்றும் பிடவூர் ஆகிய மூன்று குறுநில அரசுகள் அமைந்திருந்தன, எஞ்சியுள்ள பகுதிகள் மலையநாட்டின் ஒரு பகுதியாகவும், சோழ நாட்டின் ஒரு பகுதியாகவும் விளங்கி வந்தது.
 சோழர் காலத்தில் பெரம்பலூர் வட்டாரத்திலுள்ள அனைத்துப் பகுதிகளும் சோழமண்டலம் என்ற ஒரே மண்டலத்தில் இடம் பெற்றிருந்தன; பெரம்பலூர் வட்டாரத்தில் வாலிகண்டபுரம் வணிக நகரமாகத் திகழ்ந்தது; அக்காலத்திய நிர்வாக முறைகள், நில உரிமைகள் எவ்வாறு இருந்தன என்பது பற்றிய விளக்கம்; விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில், நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில், பெரம்பலூர் வட்டாரத்தில் தோன்றிய ஊர்கள், கோயில்கள், வணிகம் ஆகியவற்றைப் பற்றிய அரிய செய்திகள்; மராட்டிய அரசின் கீழ் பெரம்பலூர் வட்டாரம் இருந்தது; முகலாயர் ஆட்சிக் காலத்தில் மற்றும் ஆங்கிலயேர் ஆட்சிக் காலத்திலும் நிகழ்ந்த சமூக, அரசியல் மாற்றங்கள் என பெரம்பலூர் வட்டாரத்தைப் பற்றிய ஏராளமான தகவல்கள் இந்நூல் கொட்டிக் கிடக்கின்றன.
 "உ.வே.சாவும் பெரம்பலூர் வட்டாரமும்' என்ற கட்டுரை குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் வட்டாரத்தின் வரைபடங்களும், அதன் வரலாற்றுச் சான்றுகளின் புகைப்படங்களும் இந்நூலின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com