போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, இந்தியாவில் நிலவரம்...

கொலம்பியா நாட்டைச் சேர்ந்த முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று தென்னிந்தியாவில் காலூன்ற முயன்று வருவதாக தமிழ்நாடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, இந்தியாவில் நிலவரம்...

உலகில் போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. தோராயமாக, இந்தியாவில் ஒரு கோடிப் பேர் மதுவிற்கு அடிமையாக உள்ளனர், 23 இலட்சம் பேர் கஞ்சாவிற்கு (ஹாஷிஷ், சாராஸ், பாங், ஹாஷிஷ் ஆயில்) அடிமையாக உள்ளனர், 5 இலட்சம் பேர் ஓப்பியேட்டுகளுக்கு (ஒப்பியம், மார்ஃபின், கொடேயின்) அடிமையாக உள்ளனர். இவர்களில் பலர் 15 வயதை அடையும் முன்பே, இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. பின்தங்கிய சமூக, பொருளாதாரப் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சார்ந்த சிறுவர்கள் பாக்கு, புகையிலை, பீடி & சிகரெட் புகைத்தல் போன்ற பழக்கங்களில் ஈடுபடுவது பரவலாகக் காணப்படுகிறது. கஞ்சா, சாராஸ், பாங் போன்றவை இந்தியாவின் சில கலாச்சாரக் கொண்டாட்டங்களின் அங்கங்களாக உள்ளன.

கொலம்பியா நாட்டைச் சேர்ந்த முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று தென்னிந்தியாவில் காலூன்ற முயன்று வருவதாக தமிழ்நாடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கும்பலின் முயற்சிகளை முறியடிக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2016 ஆண்டு 7 கடத்தல் சம்பவங்களில் 405 கிலோ போதைப்பொருட்கள் பிடிபட்டன. 2017ம் ஆண்டில் 16 கடத்தல் சம்பவங்களில் 455 கிலோ போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளன. 

ஒப்பிட்டு பார்க்கையில் போதைப்பொருட்கள் நடமாட்டம் 13% அதிகரித்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக 18 இந்தியர்களும் 5 வெளிநாட்டினரும் சிக்கியுள்ளனர். இந்த போதை பொருட்கள் தென்- அமெரிக்க நாடான கொலம்பியாவில் இருந்தே தமிழகத்தில் விற்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. கொலம்பிய நாட்டில் போதைப்பொருட்களை அழிக்க எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கைகளால் கடந்த நவம்பர் மாதம் இந்திய மதிப்பில் ரூ.60,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிபட்டு, அழிக்கப்பட்டுள்ளன. 

போதைக்கு அடிமையானது எப்படி?

தன் சிந்தனையை போதையில் புதைத்து மன மயக்கத்தையும், குழப்பத்தையும் தன்னைத்தானே மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்றான். பள்ளிப் பருவத்திலோ அல்லது கல்லூரிகளிலோ படிக்கும் போது தீய நண்பர்களோடு ஏற்பட்ட பழக்கங்களினாலும் மற்றும் பொழுதுபோக்காகவும் பழகிக் கொண்ட பழக்கத்தை இன்று வரை விட்டு மீளமுடியவில்லை என வருத்தப்பட்டுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். பலமுறை இத்தீய பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும் என முயற்சி எடுத்து தோற்றுப் போனவர்களும் இருக்கிறார்கள். ஒன்றைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதற்கும் சேர்த்து அடிமையாகிக் கொண்டவர்களும் இருக்கின்றனர். கடின வேலை செய்பவர்கள் தங்கள் உடல் வலியை மறந்திருக்க போதையைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள். நிச்சயம் ஒரு நாள் மரணம் உண்டு, இதை விட்டு ஒழித்தால் மட்டும் மரணமின்றி வாழ்ந்துவிடலாமா? என தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டு தொடர்பவர்களும் இருக்கிறார்கள்.

இத்தகைய போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களின் குடும்ப வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, அலுவலக வேலை, நட்பு, உறவினர்கள் மற்றும் தொடர்புகள் என எல்லாவற்றிலும் விரிசல் ஏற்பட்டுவிடுகிறது. போதைக்கு அடிமையாகி இளமையிலேயே இறந்துவிடும் குடும்பத் தலைவனால் அக்குடும்பமே சிதைந்து சீரழிந்து விடுகின்றது. குழந்தைகளுக்கு அன்பு, அரவணைப்பு மற்றும் வழிகாட்டுதல் கிடைக்காமல் அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடுகின்றது.

எல்லோருக்கும் எளிமையாகவும், பரவலாகவும் கிடைத்துவிடும் போதைப்பொருள்தான் சாராயம் மற்றும் அதைச் சார்ந்த மது வகைகள். இந்தப் பழக்கம் தற்போது பள்ளிப் பருவத்திலேயே பலரும் பழகிக் கொண்டிருப்பதை கண்கூடாகக் காணமுடிகின்றது. இதற்குக் காரணம் அரசே ஆங்காங்கே அமைத்திருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளும், இதற்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமும், திரைப்படங்கள் இத்தகைய பழக்கம்; இளைஞர்கள் செய்வது தவறில்லை என்று சித்தரிப்பதும், மகிழ்ச்சி மற்றும் துக்க வேளைகளில் மது தேவை என்ற மனோநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. 

மது பரிமாறல்கள் மேலை நாட்டுக் கலாச்சாரம் என உயர்வாகக் கருதுவதும் இப்பழக்கத்திற்கு ஒரு காரணமாகும். பிரச்னைகள் மற்றும் குறைகளை போதைப்பழக்கத்தால் மறந்து நிம்மதியாக இருக்கலாம் என்று தவறாகக் கருதுவதும் இது போன்ற தீய பழக்கங்களுக்கு மக்களை ஆட்படுத்திவிடுகின்றது. தன்னைச் சுற்றியுள்ளவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால் அவரைத் திருத்த முயற்சிக்காமல் அவர்களிடமிருந்து சிறிது சிறிதாக தாங்களும் கற்றுக் கொள்கின்ற பலரும் இருக்கிறார்கள்.

போதைப் பழக்கத்தினால் முதலில் பாதிப்படைவது மனிதனின் நரம்பு மண்டலம். மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலை குறைக்கச் செய்கின்றது. இதன் காரணமாக சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களினால் இதை உட்கொண்டவர்கள் மனதளவில் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். உடல் சோர்வடைதல், குற்ற உணர்ச்சி, தனிமையை நாடுவது போன்ற அவல நிலைக்கு உள்ளாகின்றார்கள். போதைப் பொருட்களினால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், சமுதாயம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் என பலவகையான தீமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

உலக நாடுகள் எல்லாம் போதைப் பொருட்கள் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு கட்டுப்படுத்தி வருகின்றன. இருப்பினும் ஹெராயின், கஞ்சா போன்ற பொருட்களை விற்பதும் பிற நாடுகளுக்கு கடத்துவதும் இன்றுவரையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. கல்லூரி வாசல்களிலேயே கஞ்சா சாக்லேட்கள் விற்கப்படுவதும், விற்பவர்கள் கைது செய்யப்படுவதும் பத்திரிக்கைகளில் படிக்க நேரிடுகின்றது. சுற்றுலாத்தலங்களின் அருகாமையில் சிதறிக்கிடக்கும் மதுக் குப்பிகளும், ஊசிகளும் பலரும் போதைக்கு அடிமையாகிக் கொண்டிருப்பதற்குச் சான்று  பகர்கின்றன.

உலக மருத்துவ அறிக்கையின் புள்ளிவிவரப்படி உலகில் 2 கோடி பேர் ஹெராயின் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஆவார்கள். அதிர்ச்சித் தகவல் என்னவென்றால் தற்போது மேற்கத்திய நாடுகளில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை சதவிகிதத்தின் அடிப்படையில் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால் ஆசிய நாடுகளில் போதைப்பொருள் அடிமைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள் இதற்குக் காரணம் மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுகள் நம் நாடுகளில் இல்லாமல் போனதேயாகும்!


போதைக்கு எதிராக பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளன. ஆரோக்கியம் என்பது இறைவன் நமக்குக் கொடுத்த மிகப்பெரும் அருட்கொடை ஆகும். நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாமே தீங்கிழைத்துக் கொள்வது பாவமான செயலாகும். இறை நம்பிக்கையில் மனதைச் செலுத்தி இத்தீய பழக்கம் குறித்து மறுமையில் வினவப்படுவோம் என்று பயப்படுவோர் மட்டுமே இதிலிருந்து முற்றிலும் விடுபடமுடியும். நாம் செய்ய வேண்டியது இது போன்ற போதைப் பழக்கங்களிலிருந்து விலகி இருப்பது மற்றும் இது குறித்த விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் ஆகும்.


போதை என்பது தனிமனிதனை மட்டும் பாதிக்கும் பழக்கம் என எண்ணிவிட இயலாது. இதனால் அவரைச் சுற்றியுள்ள சமுதாயமும் பாதிப்படைகின்றது. படிக்கும் வயதில் போதையைப் பயன்படுத்தினால்  தம்முடைய படிப்பும் கெட்டு, தன்னோடு பழகும் சக நண்பர்களின் படிப்பையும் பாழ்படுத்திவிடுகிறது. பணிபுரிபவர்கள் போதைக்கு அடிமையானால் அலுவலக வேலையை இழந்து, தம்முடைய பொருளாதாரத்தை இழந்து குடும்பத்தை வறுமையில் கொண்டு சென்றுவிடுதல், குடும்ப மகிழ்ச்சி மற்றும் சமூக அந்தஸ்தை இழத்தல். வாகனம் ஓட்டுபவர்கள் போதையைப் பயன்படுத்துவதால் கவனம் சிதைந்து விபத்துக்களுக்கு உள்ளாகி உயிர் இழப்புகளை ஏற்படுத்துவது. சிறிது சிறிதாக போதைப்பழக்கமானது அதிகரித்து அந்த அற்ப இன்பத்தைப் பெற்றுக்கொள்ள திருடுதல், பொய் பேசுதல் மற்றும் மானக்கேடான விஷயமாக இருந்தாலும் அதைச் செய்யத் துணிந்துவிடும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது. போதையின் கோரப்பிடியில் அகப்பட்டவர்கள் அஞ்சாமல் பாலியல் குற்றங்களிலும் ஈடுபட்டு அதன் மூலம் பல நோய்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.


"போதைக்கு அடிமை" என்பதை  அறிவது எப்படி?


  ஆரம்பத்தில் பயன்படுத்திய அளவைவிட சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே செல்லுதல். மற்றும் அடிக்கடி போதை வேண்டுமென்று தோன்றுதல்.

  எதை இழந்தாலும் தனக்கு போதை தரக் கூடிய பொருளை அந்தந்த நேரத்தில் தனக்குக் கிடைக்கும் விதமாக பார்த்துக் கொள்ளுதல். அல்லது அதை முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளுதல்.

  இப்பழக்கத்தை இன்றோடு விட்டுவிட வேண்டும் என்று சபதம் ஏற்றும் பல முறை தோல்வியடைவது.

  தனக்கு போதை தரக்கூடிய பொருளை அடைய கேவலமான செயல்களைக் கூட செய்யத் துணிவது.

  நன்றாக படிக்கக்கூடிய பதினைந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் மதிப்பெண்கள் திடீரென குறையத் தொடங்குகின்றது எனில் அவர்களின் நண்பர்கள் வட்டாரத்தைக் கவனியுங்கள்.

  உடல் நிலையில் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

  செயல்பாடுகளிலோ அல்லது உரையாடல்களிலோ ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்பதை கவனியுங்கள்.

  அவர்களுடைய தனிமை அறையில் யாரும் நுழைவதைத் தடுக்கிறார்களா?

  அடிக்கடி பணம் கேட்கிறார்களா? உண்மையான தேவைதானா என்பதை கண்டறியுங்கள். படிக்கும் காலத்தில் அளவிற்கு அதிகமாக பணம் கேட்கிறார்களெனில்   ஏதோ பிழையிருக்கலாம் என கணியுங்கள். இத்தகைய செயல்கள் உங்கள் குழந்தைகளிடம் இருந்தால் அவர்களை கவனித்து போதைக்கு அடிமையாவதிலிருந்து தடுத்து நிறுத்துங்கள்.


ஊக்கி / தூண்டி (Stimulants)

இயற்கையாக உள்ள திறனை, ஆர்வத்தை அல்லது வேறு ஏதாவது ஒன்றை உடனடியாகவோ, அல்லது மெதுவாகவோ தாற்காலிகமாக அல்லது நிலையாக மேம்படுத்துவதற்குப் பயன்படும் பொருள், மருந்து, அல்லது செயல் திட்டங்கள். போதைக்காரர்கள், விளையாட்டு வீரர்கள், போட்டிகளில் வெல்வதற்காக, தங்களுடைய உடல் திறனை, தற்காலிகமாக மேம்படுத்தப் பயன்படுத்தும் ஒருவகைப் போதை மருந்து.


போதைப் பொருள் தடுப்பிரிவால் அறிவிக்கப்பட்ட போதைப்பொருட்கள்

  • கொக்கைன் (Cocaine)

  • மெதாஃபெடமைன் (ethamphetamines)

  • அம்ஃபெடமைன் (Amphetamines)

  • ரிடலின் (Ritalin)

  • சலர்ட் (Cylert)

  • உள்ளிழுப்பவை (Inhalants)

  • மின்னிகள் (Glues)

  • பெயிண்ட் தின்னர் (Paint thinner)

  • கேசோலைன் (Gasoline)

  • சிரிப்பூட்டும் வாயு (Laughing gas)

  • ஏரோசால் (Aerosol sprays)

  • கன்னாபினாய்ட் (Cannabinoids)

  • ஹஷிஸ் (Hashish)

  • மரிஜுன (Marijuana)

  • சோர்வூக்கிகள் (Depressants)

  • பார்பிசூராட் (Barbiturates)

  • பென்ஸோடைஸீபைன் (Benzodiazepines)

  • ஃப்ளூட்ராஸீபம் (Flunitrazepam)

  • GHB (Gamma-hydroxybutyrate)

  • மெதகுவாலோன் (Methaqualone)

  • அல்கஹால் (Alcohol)

  • ட்ரான்குல்லிசர் (Tranquillisers)

  • ஒப்பியட் மற்றும் மார்ஃபைன் (Opioids & Morphine Derivatives)

  • கோடீன் (Codeine)

  • ஃபெண்டனைல் (Fentanyl and fentanyl analogs)

  • ஹெராயின் (Heroin)

  • மார்பைன் (Morphine)

  • ஓபியம் (Opium)

  • ஆக்ஸிடோன் (Oxycodone HCL)

  • ஹைட்ரோகோடோன் பிடாட்ரேட், அசிடமினொஃபென் (Hydrocodone bitartrate, acetaminophen)

  • ஸ்டோராய்ட்கள் (Anabolic Steroids)

  • அனட்ரோல் Anadrol)

  • ஆக்ஸட்ரின் (Oxandrin)

  • டுரபோலின் (Durabolin)

  • ஸ்டானோசால் (Stanozol)

  • டையனபால் (Dianabol)

  • Hallucinogens

  • லைசெர்ஜிக் அமிலம் டைதைலமைட் (LSD (lysergic acid diethylamide))

  • மெஸ்கலைன் Mescaline

  • சிலோசைபின் (Psilocybin)

  • கன்னபிஸ் (Cannabis)

  • Magic Mushrooms

  • Prescription Drugs

  • Opiods: Codeine, Oxycodone, Morphine

  • Central nervous system depressants: barbiturates, benzodiazepines

  • Stimulants: dextroamphetamine, methylphenidate

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு!

தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (Narcotics Control Bureau) என்பது இந்தியாவில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 47 ன் படி மருத்துவ உபயோகங்கள் நீங்கலாக மற்ற அனைத்து வகையான போதைப்பொருள் உபயோகத்தை தடுக்க வழி வகை செய்கிறது

தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு  என்பது இந்தியாவில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 47ன் படி மருத்துவ உபயோகங்கள் நீங்கலாக மற்ற அனைத்து வகையான போதைப்பொருள் உபயோகத்தை தடுக்க வழி வகை செய்கிறது

மருந்துகள் மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டம், 1940, நார்கோடிக் மருந்துகள் மற்றும் உளச்சார்புள்ள பொருட்கள் சட்டம், 1985, போதை மருந்துகள் மற்றும் சைக்கோதெரபி பொருட்கள் சட்டம் 1988 இல் சட்டவிரோத கடத்தல் தடுப்பைத் தடுக்க இப்பிரிவு தொடங்கப்பட்டது.

அமைப்பு

மண்டலங்கள்

மண்டலம்

தலமையிடம்

அகமதாபாத்

அகமதாபாத்

பெங்களூரு

பெங்களூரு

சண்டிகர்

சண்டிகர்

சென்னை

சென்னை

டில்லி

டில்லி

கவுகாத்தி

கவுகாத்தி

இந்தூர்

இந்தூர்

ஜம்மு

ஜம்மு

ஜோத்பூர்

ஜோத்பூர்

கொல்கத்தா

கொல்கத்தா

லக்னோ

லக்னோ

மும்பை

மும்பை

பாட்னா

பாட்னா

உப-மண்டலங்கள்

உப-மண்டலம்

தலமையிடம்

அஜ்மிர்

அஜ்மிர்

அம்ரிஸ்டர்

அம்ரிஸ்டர்

புவனேஸ்வர்

புவனேஸ்வர்

டெஹ்ராடுன்

டெஹ்ராடுன்

கோவா

கோவா

ஹைதராபாத்

ஹைதராபாத்

இம்பால்

இம்பால்

மண்ட்சவுர்

மண்ட்சவுர்

மதுரை

மதுரை

மண்டி

மண்டி

ராய்பூர்

ராய்பூர்

ராஞ்சி

ராஞ்சி

திருவனந்தபுரம்

திருவனந்தபுரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com