மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில் குடமுழுக்கு

மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. 
குடமுழுக்கு விழாவில் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்படும் புனித நீர். 
குடமுழுக்கு விழாவில் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்படும் புனித நீர். 


மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. 
திருத்தணி முருகன் கோயிலின் துணைக் கோயிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில் மத்தூர் கிராமத்தில் உள்ளது. இந்த கோயிலின் அம்மன் சுயம்பு அம்மன் ஆகும். 
இக்கோயிலின் திருப்பணிகள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2 மாதங்களாக நடந்தது. இதையடுத்து, டிச. 10 -ஆம் தேதி கோயில் வளாகத்தில் யாககுண்டங்கள் அமைத்து சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர்.
புதன்கிழமை காலை 11 மணிக்கு கலச ஊர்வலம் நடந்தது. பின்னர், கோபுரக் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி ஓம் சக்தி என்று முழக்கமிட்டனர். தொடர்ந்து, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர், மகிஷாசுரமர்த்தினி அம்மன் மீது புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. 
விழாவில், இந்து சமய அறநிலைத்துறை நகை சரிபார்ப்பு இணை ஆணையர் ந. தனபால், முன்னாள் அமைச்சர் ரமணா, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக செயலர் டி.எம். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ. சி. சிதம்பரம், முன்னாள் திருவள்ளூர்- காஞ்சிபுரம் மாவட்ட ஆவின் பால் தலைவர் வேலஞ்சேரி த. சந்திரன், திமுக நகரச் செயலர் எம். பூபதி, அதிமுக ஒன்றியச் செயலர்கள் இ.என். கண்டிகை எ.ரவி, திருவாலங்காடு சக்திவேல் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் சேகர் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், இணை ஆணையர் செ. சிவாஜி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com