குத்தாலத்தில் விமரிசையாக நடைபெற்ற கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்

மயிலாடுத்துறை, குத்தாலத்தில் நடைபெற்ற கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவத்தில் நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி..
குத்தாலத்தில் விமரிசையாக நடைபெற்ற கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்

மயிலாடுத்துறை, குத்தாலத்தில் நடைபெற்ற கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவத்தில் நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

தாமிரபரணி மகா புஷ்கரத்தையொட்டி கடந்த அக்டோபர் மாதம் விழா நடந்த 12 நாட்களும் இங்கு மகா ஆரத்தி நடந்தது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் மகா ஆரத்தி நடத்தப்படுகிறது. 

சூரிய பகவான் குத்தாலத்தில் தவம் இருந்து சிவபெருமான் அருள் பெற்றார் என்பதன் ஐதீகமாக கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் கொண்டாடப்படுகிறது. 

அந்த வகையில், நாகை மாவட்டம் குத்தாலத்தில் கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. உக்தவேதீஸ்வரர், காளீஸ்வரர், சோழிஸ்வரர், மன்மதீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதிஉலா வந்து காவிரி தீர்த்த படித்துறையில் எழுந்தருளினர். 

அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com