வெள்ளிக்கிழமை 14 டிசம்பர் 2018

வரதராஜப் பெருமாள் கோயிலில் இன்று ரத்னாங்கி சேவை

DIN | Published: 06th December 2018 02:18 AM


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை (டிச. 6) ரத்னாங்கி சேவை உற்சவம் நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் 2 நாள்களில் ரத்ன அங்கி சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாதத்தில் தேசிகர் சாற்றுமுறை உற்சவ நாளிலும், வைகுண்ட ஏகாதசி நாளிலும் நடைபெறும்.
அவ்வகையில், வியாழக்கிழமை கார்த்திகை மாத அனுஷம் நட்சத்திரத்தையொட்டி, தேசிகர் சாற்றுமுறை உற்சவம் வரதராஜப் பெருமாள் கோயிலில் விமரிசையாக நடைபெறவுள்ளது. அப்போது, வரதராஜப் பெருமாள் ரத்ன அங்கி கவச உடை அணிந்து, பெருந்தேவி தாயாருடன் ஆழ்வார் பிரகாரம் வழியாக தாத தேசிகர் சந்நிதிக்குச் செல்வார். அதைத்தொடர்ந்து, ரத்னாங்கி சேவை உற்சவம் நடத்தப்படும். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்வர். 

More from the section

திருவண்ணாமலை மகா தீப மலையில் புனித நீர் தெளிப்பு: அண்ணாமலையார் பாதத்துக்கு பூஜை
சபரிமலை: சில கட்டுப்பாடுகளை நீக்கியது கேரள உயர்நீதிமன்றம்
தினமணி செய்தி எதிரொலி: வள்ளிமலை முருகன் கோயிலுக்கான புதிய கொடி மரம் மலை மீது ஏற்றும் பணி தொடக்கம்
புத்துணர்வு முகாமுக்கு புறப்பட்டது ராமாநுஜர் கோயில் யானை
மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில் குடமுழுக்கு