தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்பு  

தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் இரண்டாவது முறையாக வியாழனன்று பதவியேற்றுக் கொண்டார். 
தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்பு  

ஹைதாராபாத்: தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் இரண்டாவது முறையாக வியாழனன்று பதவியேற்றுக் கொண்டார். 

தெலங்கானா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கு டிசம்பர் 7 - ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே டி.ஆர்.எஸ். கட்சியே முன்னிலை வகித்தது. ஒவ்வொரு கட்டமாக தேர்தல் முடிவுகள் வெளிவரும்போதும், அக்கட்சியின் முன்னிலை விகிதம் அதிகரித்தபடியே இருந்தது. 

காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணிக்கு போதிய ஆதரவு இல்லை. வாக்கு எண்ணிக்கை முடிவில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் டி.ஆர்.எஸ். 88 தொகுதிகளில் வென்றது. அதாவது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அக்கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் அக்கட்சி எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார். 

அதனையடுத்து சந்திரசேகர ராவ்  தெலங்கானா ஆளுநர் நரசிம்மனை புதனன்று நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். 

இந்நிலையில் தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் இரண்டாவது முறையாக வியாழனன்று பதவியேற்றுக் கொண்டார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவர் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் நரசிம்மன் அவ்ருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

இன்னும் இரண்டொரு நாட்களில் சந்திரசேகர ராவின் அமைச்சரவை பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com