2018-ல் அதிகம் தேடப்பட்ட விவரங்களின் பட்டியலை வெளியிட்டது கூகுள்!

2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விவரங்கள் குறித்த பட்டியலை பிரபல தேடுதளமான கூகுள் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. 
2018-ல் அதிகம் தேடப்பட்ட விவரங்களின் பட்டியலை வெளியிட்டது கூகுள்!

2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விவரங்கள் குறித்த பட்டியலை பிரபல தேடுதளமான கூகுள் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. 

அதிகம் தேடப்பட்ட நட்சத்திர நபராக மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் இடம்படித்துள்ளார். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோனஸ், நடனக் கலைஞர் சப்னா சௌத்ரி, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, பாலிவுட் நடிகை சோனம் கபூர் கணவர் ஆனந்த அஹுஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் நட்சத்திர திருமணங்களின் எதிரொலியாக பிரபல அமெரிக்க நடிகையும், டட்சஸ் ஆஃப் சசக்ஸ் இளவரசியுமான மேகன் மார்கிள் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட வெளிநாட்டு பிரபலமாக உள்ளார். 

எப்படி செய்ய வேண்டும் (ஹைவ் டூ) என்ற தேடலில், வாட்ஆப்பில் ஸ்டிக்கர் அனுப்புவது எப்படி, ஆதாரில் மொபைல் எண் இணைப்பது எப்படி, ரங்கோலி கோலமிடுதல் எப்படி, மொபைல் எண்ணை போர்ட் செய்வது எப்படி, பிட்காயினில் முதலீடு செய்வது எப்படி என்ற தேடல்கள் அதிகம் இடம்பிடித்துள்ளன.

என்ன (வாட் ஈஸ்) என்ற தேடலில், சட்டப் பிரிவு 377 என்றால் என்ன, சிரியாவில் என்ன நடக்கிறது, கிகி சேலஞ்ச் என்றால் என்ன, மீ டூ என்றால் என்ன, பந்து சேதம் என்றால் என்ன போன்ற கேள்விகள் அதிகம் இடம்பிடித்துள்ளன.

இந்த வருடம் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான தேடல்கள் தான் அதிகம் ஆக்கிரமித்துள்ளன. 2018 ஃபிஃபா உலகக் கோப்பை, ஐபிஎல் தொடர்பாக அதிகம் தேடப்பட்டுள்ளன. அதிலும் கிரிக்கெட்டை விட கால்பந்து தொடர்பாகவே தேடல்கள் அமைந்துள்ளன. பொழுதுபோக்கில் பிக் பாஸ், ரோபோட் 2.0, ரஜினிகாந்த், அக்ஷய் குமார் ஆகியோர் அதிகம் தேடப்பட்டுள்ளனர்.

சினிமாவைப் பொறுத்தவரையில் ஹாலிவுட் திரைப்படங்களை விட பாலிவுட் திரைப்படங்கள் தான் அதிகம் தேடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ரோபோட் 2.0 திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. பாகி 2, ரேஸ் 3 ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இருந்தாலும், மார்வெல் படைப்புகளான அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிடி வார், பிளாக் பேந்தர் மற்றும் டேட்பூல் 2 ஆகிய திரைப்படங்கள் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டுள்ளன.

நேஹா கக்கரின் 'தில்பர் தில்பர்', அர்ஜித் சிங்கின் 'தேரா ஃபிதூர்' மற்றும் ஆதிஃப் அஸ்லாமின் 'தேக்தே தேக்தே' போன்ற பாலிவுட் பாடல்கள் அதிகம் தேடப்பட்டுள்ளன. அந்நிய பாடல்களில் லத்தின் மொழிப் புகழ் 'டேஸ்பேகிடோ' பாடல் தொடர்ந்து 2-ஆவது வருடமாக அதிகம் தேடப்பட்ட பாடலாக திகழ்ந்து வருகிறது.

பிரபலங்கள் பலர் இந்தாண்டு திருமணம் செய்துகொண்டதை அடுத்து அவை தொடர்பாகவும் அதிகம் தேடப்பட்டுள்ளன. அதிலும் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ், தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் மற்றும் சோனம் கபூர் - ஆனந்த் அஹுஜா ஆகிய 3 ஜோடிகளின் திருமணங்கள் தொடர்பாக அரிய அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.

கர்நாடக தேர்தல் மட்டும் தான் அரசியல் தொடர்பான நிகழ்வில் அதிகம் தேடப்பட்டதாக உள்ளது.  குஜராத்தில் சமீபத்தில் திறந்துவைக்கப்பட்ட சர்தார் வல்லபபாய் படேல் சிலை குறித்து அறிந்துகொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். 

மேலும் மத்திய பட்ஜெட், சட்டப் பிரிவு 377 நீக்கம், பிட்காயின் மற்றும் நிபா வைரஸ் குறித்தும் அறிந்துகொள்ள அதிக தேடல்களில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com