மகாத்மா காந்தி அன்றே சொன்னார்.. காங்கிரஸ் ஜெயிக்கும் என்று

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கும் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகாத்மா காந்தி அன்றே சொன்னார்.. காங்கிரஸ் ஜெயிக்கும் என்று


தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கும் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மிசோரமில் மிஸோ தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. இந்த நிலையில், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. 

இதுபற்றி சமூக வலைத்தளங்களில் வெளிவரும் ஒரு தகவல் என்னவென்றால், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 2 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து தோல்வி முகம் காட்டி வந்த காங்கிரஸ், அதுவும் மக்களவைத் தேர்தலை விரைவில் எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது நிச்சயம் கட்சிக்கு ஒரு உற்சாகத்தை அளித்திருக்கும்.

இன்று காங்கிரஸ் பெற்றிருக்கும் வெற்றிக்கு காந்தியின் ஒரு பொன்மொழி, மிகச் சரியாகவே பொருந்துவதாக உள்ளது.

அதாவது, முதலில் அவர்கள் உன்னை புறக்கணிப்பார்கள்..
பிறகு உன்னைப் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள்..
மேலும் உன்னிடம் அவர்கள் சண்டையிடுவார்கள்..
பிறகு நீ வெல்வாய்.. என்பதே அது.

இதில் கூறப்பட்டிருப்பதைப் போலவே காங்கிரஸ் கட்சி முதலில் புறக்கணிக்கப்பட்டது, கட்சித் தலைவர்களின் பேச்சுக்கள் சிரிப்பலையை ஏற்படுத்தியது, எதிரான கோஷங்கள் எழுந்தன. பிறகு இன்று இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி முகம் காட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com