தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம்: ஆட்சியைத் தக்க வைக்கிறது டிஆர்எஸ்

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சியே மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கிறது.

தேர்தல் நடத்தப்பட்ட 119 தொகுதிகளில் தற்போது டிஆர்எஸ் கட்சி 86 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா எனும் புதிய மாநிலம் உருவாகப் போராடிய சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சியே மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில், கடந்த 7-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. 

இங்கு தேர்தல் களத்தில் 1,821 வேட்பாளர்கள் உள்ளனர். ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), பாஜக ஆகிய கட்சிகள் தனித்தும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ஜன சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணியாகவும் தேர்தல் களத்தில் உள்ளன. 

இந்த மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே வாக்கு கணிப்புகள் வெளியாகின. அவற்றை மெய்ப்பிக்கும் வகையில் டிஆர்எஸ் முன்னிலையில் உள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com