சத்தீஸ்கர் தேர்தல் நிலவரம்: ஆட்சியைக் கைப்பற்றுகிறது காங்கிரஸ்

பாஜக ஆளும் சத்தீஸ்கர்  மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் 58 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 
சத்தீஸ்கர் தேர்தல் நிலவரம்: ஆட்சியைக் கைப்பற்றுகிறது காங்கிரஸ்


பாஜக ஆளும் சத்தீஸ்கர்  மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் 58 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 

சத்தீஸ்கரில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் காங்கிரஸ் 59 இடங்களிலும், பாஜக 22 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இதன் மூலம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியமைவது உறுதியாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து பாஜக தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. இப்போது 4-ஆவது முறையாக ஆட்சியை அக்கட்சி தக்க வைக்கக் கடுமையாக போராடிய நிலையில், பாஜகவின் கனவை காங்கிரஸ் சுக்குநூறாக்கியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று வாக்கு கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில், அதனை மாற்றி, ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் முன்னிலை வகித்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com