வியாழக்கிழமை 13 டிசம்பர் 2018

அம்பேத்கர் நினைவு தினம்: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர், ஜனாதிபதி புகழஞ்சலி 

IANS | Published: 06th December 2018 11:39 AM

 

புது தில்லி: மறைந்த சட்ட மேதை அம்பேத்கரின் 62-ஆவது நினைவு தினத்தினை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். 

இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபையின் தலைவரும், சட்ட மாமேதையுமான அம்பேத்கரின் 62-ஆவது நினைவு தினம் வியாழனன்று அனுஷ்டிக்கப்பட்டது. 

இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.

நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களும் க லந்து கொண்டனர்.  

Tags : modi parliment sumithar mahajan thambidurai ramnath govind venkaiah naidu BR ambedkar deathaniversary floral tribute

More from the section

ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கு: நாளை தீர்ப்பு
மிஸோரம் சட்டப்பேரவை உறுப்பினர்களில் 40-இல் 36 பேர் கோடீஸ்வரர்கள்: அடேங்கப்பா ரிப்போர்ட்!
ராஜஸ்தான் முதல்வராகிறார் அஷோக் கெலாட்: இன்று மாலை அறிவிப்பு
நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி 
தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்பு