வியாழக்கிழமை 13 டிசம்பர் 2018

மேக்கேதாட்டு அணை முடிவை கைவிடப்போவதில்லை: கர்நாடக அரசு திட்டவட்டம்

DIN | Published: 06th December 2018 08:37 PM

 

மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பினார். மேலும் அதனுடன், தமிழக அரசின் தீர்மானம் தொடர்பான ஆவணமும் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

அந்த கடிதத்தில் தீர்மான நகலுடன், தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியில் எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் எனவும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், அணை கட்டுவது குறித்து ஆய்வுப் பணிகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. 

More from the section

மத்திய பிரதேசத்தின் முதல்வராக கமல்நாத் தேர்வு: காங்கிரஸ் அறிவிப்பு
ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கு: நாளை தீர்ப்பு
மிஸோரம் சட்டப்பேரவை உறுப்பினர்களில் 40-இல் 36 பேர் கோடீஸ்வரர்கள்: அடேங்கப்பா ரிப்போர்ட்!
ராஜஸ்தான் முதல்வராகிறார் அஷோக் கெலாட்: இன்று மாலை அறிவிப்பு
நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி