செவ்வாய்க்கிழமை 11 டிசம்பர் 2018

இந்தியாவின் மிக நீளமான ரயில்-சாலை பாலம்: 25-இல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

DIN | Published: 06th December 2018 01:12 AM

இந்தியாவின் மிக நீளமான ரயில்-சாலை பாலத்தை வரும் 25-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார்.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரயில்-சாலை பாலத்தை தேசிய நல்லாட்சி தினமான வரும் 25-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார் என்று தெரிவித்தனர்.
அருணாசலப் பிரதேசத்தில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் தீட்டப்பட்ட பல்வேறு திட்டங்களுள் இந்தப் பாலமும் ஒன்று. இதனுடன் பிரம்மபுத்திரா நதியின் வடக்குக் கரை ஓரமாக சாலை அமைக்கும் திட்டமும், பிரம்மபுத்திரா நதிக்கும் அதன் கிளை நதிகளான திபாங், லோகித் உள்ளிட்டவற்றுக்கும் இடையே ரயில் மற்றும் சாலைத்தொடர்பை ஏற்படுத்தும் திட்டமும் அடங்கும். 
இந்தியாவின் மிக நீளமான ரயில்-சாலை பாலமான இது 4.94 கி.மீ. நீளம் கொண்டது. இந்தப் பாலத்துக்கு கடந்த 1997-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அப்போதைய பிரதமர் ஹெச்.டி.தேவேகெளடா அடிக்கல் நாட்டினார். ஆனால், கடந்த 2002-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின்போது தான் இந்தப் பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
சுமார் 16 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தில் முதல் முறையாக கடந்த 3-ஆம் தேதி ரயில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது 
குறிப்பிடத்தக்கது.

More from the section

மகாத்மா காந்தி அன்றே சொன்னார்.. காங்கிரஸ் ஜெயிக்கும் என்று
தெலங்கானாவில் டிஆர்எஸ்: சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 3 போலீஸார் சுட்டுக்கொலை: ஆயுதங்கள் கொள்ளை
தில்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் ராகுல் காந்தி மாலை 5 மணிக்கு சந்திப்பு 
பாஜக-வுக்கு எதிராக போட்டியிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: சச்சின் பைலட்