வியாழக்கிழமை 13 டிசம்பர் 2018

நாள்பட்ட சிறுநீரக தொற்று நோய்  குணமாக

By கோவை பாலா| Published: 29th November 2018 03:40 PM

 

சத்துக்கள் : நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள்  உள்ளன.

தீர்வு : ஒரு பீர்க்கங்காய் (சிறிதளவு முற்றிய காய் எடுத்து  தோல் மற்றும் விதையுடன்) நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு  அதனுடன், எலுமிச்சம் பழம் தோலோடு சிறியது (1), புதினா (சிறிதளவு)  சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி  வடிகட்டி அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

பருப்புக் கீரை சூப் : (காலையில் குடிக்கவும்)

தேவையான பொருட்கள்

பருப்புக் கீரை - 2 கட்டு
மிளகு, சீரகம் - ஒரு ஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு துண்டு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
மல்லி, புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு
உப்பு, மஞ்சள், எண்ணெய் -  தேவையான அளவு

செய்முறை : 

கீரையை சுத்தம் செய்யவும்.

மஞ்சள், சீரகம் , மிளகு ஆகியவற்றைச் சேர்துது கீரையுடன் அரைத்து சாற்றை வடிகட்டிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு , வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி அதனுடன் வடிகட்டி வைத்துள்ள கீரைச்சாற்றையும் சேர்த்து தேவைக்கு கொஞ்சம் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து  பின்பு கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து இறக்கி வைத்துக் கொண்டு காலை வேளை வெறும் வயிற்றில் குடித்து வரவும். பின்பு வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

More from the section

அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள் செயல்பட வேண்டும்:  அமைச்சர் டி.ஜெயக்குமார்
அரசு மருத்துவமனையில் சடலத்தை எலி கடித்ததால் உறவினர்கள் அதிர்ச்சி
பன்றிக் காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலி
தோல் சார்ந்த பிரச்சனைகள் தீர
உறுப்பு மாற்று சிகிச்சையில் முறைகேடு இல்லை: சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்