தோல் சார்ந்த பிரச்சனைகள் தீர

வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன
தோல் சார்ந்த பிரச்சனைகள் தீர

காய் : கோவக்காய்

சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன

தீர்வு : கோவைக்காய் (10), கத்தரிக்காய் (2 இளம் பிஞ்சுகாய்), பீர்க்கங்காய் (150 கிராம் ), வெற்றிலை (2), புதினா (சிறிதளவு) இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு மோர் அல்லது தண்ணீர் நிறைய ஊற்றி  நன்றாக அரைத்து ஜூஸாக்கி  வடிகட்டி வைத்துக் கொண்டு காலை முதல் மாலை வரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். தீர்ந்து விட்டால் மறுபடியும் தயார் செய்து குடித்து வரவும். கோவைக்காயை  நீராவியில் வேக வைத்து பொறியலாக செய்து அவற்றில் தேங்காயை அதிகமாகப் போட்டு உணவிற்கு அதிகமாக  எடுத்துக் கொள்ளலாம். பின்பு பசித்தால் உணவு எடுத்துக்கொள்ளுங்கள்

மேற்பூச்சு : ரணக் கள்ளி செடியின் சமூலத்தை எடுத்து இடித்து சாறு (500 மில்லி), தேங்காய் எண்ணை (400 மில்லி), அதனுடன் கஸ்தூரி மஞ்சள் (10 கிராம்),  நீராடி முடித்து (20 கிராம்) , கார்போக அரிசி (30 கிராம்) , மஞ்சள் (40 கிராம்) , கசகசா (5 கிராம்)  சேர்த்து இடித்து அனைத்தையும் ஒன்றாக கலந்து அடுப்பில் சிறு தீயாக கொதிக்க வைத்து சாறு சுண்டிய பின்னர் வடிகட்டி வைத்துக் கொண்டு, காலையில் எழுந்து சர்மநோய் உடையவர் தலை முதல் கால் வரை மேலுக்குப் பூசி அரைமணி நேரம் ஊரவைத்துப் பின்னர் இளஞ்சூடான நீரில் சீயக்காய்த் தூள் போட்டுக் குளித்துவந்தால் குட்டம், மேகநீர், ஊரல் படை, கருமேகநீர், சம்பந்தமான சர்ம நோய், செம்மேகப்படை, கிரந்தி நோய்கள் அனைத்தும் நீங்கும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com