செவ்வாய்க்கிழமை 11 டிசம்பர் 2018

தலைமுடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர ஒரு எளிமையான ஆலோசனை

By கோவை பாலா| Published: 06th December 2018 11:38 AM

காய் : கொத்தவரங்காய் + எலுமிச்சம் பழத்தோல் 
 
சத்துக்கள் : இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது.

தீர்வு : கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி காயவைத்தது (500 கிராம்), எலுமிச்சம் பழத்தோல் (100 கிராம்), கறிவேப்பிலை (300 கிராம்), கரிசலாங்கண்ணிக் கீரை (300 கிராம்) இவை  நான்கையும்  எடுத்து உலர்த்திப் பொடி செய்து  வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சுடுநீரில் கலந்து  சாப்பிட்டு வந்தால் தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் சம அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து விழுதாக்கி தலைக்கு நன்றாக தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து  குளிக்கவும். இவ்வாறு வாரம் ஒருமுறை இதுபோல செய்தால் முடகயின்  வளர்ச்சி தூண்டப்பட்டு கருமையாக முடி வளரும். 

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை 
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com
  

Tags : Hair growth hair loss தலைமுடி உதிர்தல் tips for hair முடி வளர தலைமுடி வளர

More from the section

தோல் சார்ந்த பிரச்சனைகள் தீர
உறுப்பு மாற்று சிகிச்சையில் முறைகேடு இல்லை: சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்
குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டுமா?
தலைமுடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர சூப்பர் டிப்ஸ்
அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை