தொழிலாளர் துறையில் அலுவலக உதவியாளர் வேலை

தொழிலாளர் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி
தொழிலாளர் துறையில் அலுவலக உதவியாளர் வேலை

தொழிலாளர் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தெரிவித்தார்.

இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் எல்லைக்குள்பட்ட திருப்பூர், குன்னூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர் பணியிடங்களை இன சுழற்சி விதிகளின் அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்ட உள்ளன.
தொழிலாளர் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அடிப்படைப் பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல் பணியின் தன்மையாக இருக்கும். ரூ.15,700 - ரூ.50,000 என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளாகும்.

கல்வித் தகுதி- 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். சிறப்புத் தகுதிகள்:- மிதிவண்டி ஒட்ட தெரிந்திருத்தல் வேண்டும். இதற்கான வயது வரம்பு: 01.07.2018 அன்று 18 வயது நிறைவடைந்திருத்தல் வேண்டும்.

இன சுழற்சி முறையில் பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு(முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் 32 வயதுக்குள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை (அனைத்து வகுப்பிநர் 35 வயதுக்குள். புகுமுக வகுப்பு (பி.யூ.சி.)அல்லது மேல்நிலைப் பள்ளி அல்லது பட்டயப் படிப்பு முறையான பாடத்திட்டம் மூலம் பட்டப் படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட , ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை(ணனைத்து வகுப்பினர்) உச்சவயது வரம்பு இல்லை.

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் - 34 வயதுக்குள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்றவிதவை (அனைத்து வகுப்பினர்) 40 வயதுக்குள், முன்னாள் ராணுவத்தினர் - ஆதிதிராவிடர், பழங்குடியினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு -53 வயதுக்குள், முன்னாள் ராணுவத்தினர் - ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லாதோர் -48 வயதுக்குள் மாற்றுத்திறனாளிகள் - வயது உச்ச வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள் மற்றும் 40 வயதுக்குள் பணியிடம் காலியின்மை ரணமாக பணியிழந்த அரசுப் பணியாளர்களுக்கு வயது உச்ச வரம்புடன் கூடுதலாக முந்தைய அரசுப்பணி புரிந்த காலம் இருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கான விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களை  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்போது விண்ணப்பிக்கும் போது, அவர்கள் விண்ணப்பங்களை தற்போது பணிசெய்யும் விவரங்களுடனும், அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அட்டை மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள்( ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை மற்றும் கலமப்பு திருமணம் மற்றும் பிற வகைகள் முன்னுரிமை பெற்றோர்) மார்பளவு புகைப்படத்தை விண்ணப்பத்தில் ஒட்டியும், இரு புகைப்படங்களை தனியாகவும் இணைத்து மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பத்துடன் கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், டாக்டர் பாலசுந்தரம் சாலை, ஆர்.டி.ஓ. அலுவலக வளாக பின்புறம், கோயம்பத்தூர் - 641018 என்ற முகவரிக்கு 28.12.2018 ஆம் தேதி பிற்பகல் 5.30 மணிக்குள் கிடைக்கும்படி நேரிலோ, தபாலிலோ அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com