சீன ரசாயனங்கள் இறக்குமதிக்கு பொருள் குவிப்பு வரி?

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை ரசாயன பொருள்களுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு வரியை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை ரசாயன பொருள்களுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு வரியை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாயம் மற்றும் புகைப்படத் தொழில்துறையில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களில் பெருமளவு சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. மிகவும் மலிவான விலையில் இவை இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு நிறுவனங்களால் அவற்றுடன் போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது.
உள்நாட்டு நிறுவனங்களின் நலனை கருத்தில் கொண்டு, சீனாவிலிருந்து இறக்குமதி ரசாயனங்களுக்கு டன்னுக்கு 1,015.44 டாலர் முதல் 573.92 டாலர் வரையில் பொருள் குவிப்பு வரியை ஐந்தாண்டுகளுக்கு விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசும் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 
பொருள் குவிப்பு வரி விதிப்பை அமல்படுத்துவது குறித்து மத்திய நிதி அமைச்சகம் தனது இறுதி முடிவை விரைவில் அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com