பணியாற்றுவதற்கு உகந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்: முதலிடத்தில் அடோப்

இந்தியாவில் பணியாற்றுவதற்கு உகந்த தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்களின் பட்டியலில், அடோப் நிறுவன முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பணியாற்றுவதற்கு உகந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்: முதலிடத்தில் அடோப்


இந்தியாவில் பணியாற்றுவதற்கு உகந்த தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்களின் பட்டியலில், அடோப் நிறுவன முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து இண்டீட் வலைதளம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பணியாற்றுவதற்கு மிகவும் ஏற்ற நிறுவனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு
தயாரிக்கப்பட்ட பட்டியலில், அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள அடோப் நிறுவனம் முதலிடத்தை வகிக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக, அமெரிக்காவின் என்விடியாவும், முன்றாவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, இந்தப் பட்டியலில் 10-ஆவது இடத்தை வகிக்கிறது. 
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய பொதுத் துறை அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியலின் முதல் ஐந்து இடங்களை பன்னாட்டு நிறுவனங்கள் பிடித்திருந்தாலும், மின்த்ரா, டாடா கன்சல்டன்சி சர்வீஸ் போன்ற இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com