சரிவிலிருந்து மீண்டது சென்செக்ஸ்: 190 புள்ளிகள் உயர்வு

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீர் ராஜிநாமா செய்தது, 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது போன்ற சூழலிலும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை 190
சரிவிலிருந்து மீண்டது சென்செக்ஸ்: 190 புள்ளிகள் உயர்வு


ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீர் ராஜிநாமா செய்தது, 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது போன்ற சூழலிலும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை 190 புள்ளிகள் உயர்ந்தது.
மாநில தேர்தலுக்குப் பிறகு வெளியான கருத்துக் கணிப்புகள் பாஜக-வுக்கு சாதகமாக அமையாததால், திங்கள்கிழமை நடைபெற்ற பங்கு வர்த்தகத்தின்போது முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக செயல்பட்டனர். இதன் காரணமாக, சென்செக்ஸ் 714 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.
இந்தச் சூழலில், மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பங்கு வர்த்தகம் தொடக்கத்தில் மந்தமாகக் காணப்பட்டு, சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்தது.
எனினும், பங்கு வர்த்தகம் பின்னர் சுறுசுறுப்படைந்து 35,150 புள்ளிகளாக நிறைவடைந்தது. இது, முந்தைய நாளைவிட 190 புள்ளிகள் அதிகமாகும்.
தேசிய பங்குச் சந்தையிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில், நிஃப்டி 60 புள்ளிகள் உயர்ந்து, 10,549-ஆக நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com