புதிய மாடல் கார் அறிமுகத்தில் கியா மோட்டார்ஸ் தீவிரம்

தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் புதிய மாடல்களில் கார்களை அறிமுகப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
புதிய மாடல் கார் அறிமுகத்தில் கியா மோட்டார்ஸ் தீவிரம்


தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் புதிய மாடல்களில் கார்களை அறிமுகப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து கியா மோட்டார்ஸ் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான கோக்கியுன் ஷிம் பிடிஐ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கியா மோட்டார்ஸ் வரும் 2019-ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து வாகனங்களின் விற்பனையை தொடங்க உள்ளது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 1 புதிய மாடலை அறிமுகப்படுத்த நிறுவனம் உறுதி பூண்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆறு மாடல்களில் கார்களை அறிமுகப்படுத்த பரிசீலித்து வருகிறோம். எங்களது இலக்கு பிரிமீயம் பிராண்ட் கார்கள் மட்டுமே.
கியா மோட்டார்ஸ் சர்வதேச அளவில் 180 நாடுகளின் சந்தைகளில் களமிங்கியதன் மூலம் ஏராளமான அனுபவங்களை ஈட்டியுள்ளது. இது, இந்தியாவில் டாப் 5 வாகன விற்பனை நிறுவனங்களில் இடம்பிடிக்க பெரிதும் உதவியாக இருக்கும். எங்களின் இலக்கு வெறும் கனவு இலக்காக இல்லாமல் அனுபவத்தின் அடிப்படையிலான இலக்காக இருக்கும். சாத்தியமாகக் கூடியதை மட்டுமே நாங்கள் சிந்திப்போம் என்றார் அவர்.
கடந்த 2017-18-இல் 33 லட்சம் பயணிகள் வாகன விற்பனையில் நடுத்தர வகை கார்களின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது. இருப்பினும், தற்போது இந்தப் பிரிவில் கவனம் செலுத்தப்போவதில்லை என கியா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் ஆலை அமைக்க 110 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,700 கோடி) முதலீடு செய்துள்ளது. ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறனில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 
இந்திய பயணிகள் வாகன சந்தையில் மாருதி சுஸுகி இந்தியா தற்போது முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஹுண்டாய், மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com