வியாழக்கிழமை 13 டிசம்பர் 2018

கார்களின் விலையை ரூ.1 லட்சம் வரை உயர்த்துகிறது இசுசூ

DIN | Published: 05th December 2018 01:08 AM


கார்களின் விலையை ரூ.1 லட்சம் வரை உயர்த்தவுள்ளதாக இசுசூ மோட்டார்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது: இடுபொருள்கள் செலவினம் உயர்வு மற்றும் விநியோகக் கட்டணம் அதிகரிப்பு போன்றவற்றால் இசுசூ நிறுவனம் கார்களின் விலையை ரூ.1 லட்சம் வரை உயர்த்தவுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது.
அதன்படி நிறுவனத்தின் தயாரிப்பான டி-மேக்ஸ் ரெகுலர் கேப், டி-மேக்ஸ் எஸ் -கேப் வாகனங்களின் விலை 1-2 சதவீதம் வரையிலும், டி-மேக்ஸ் வி-கிராஸ் மற்றும் எம்யு-எக்ஸ் வாகனங்களின் விலை 3-4 சதவீதம் வரையிலும் அதிகரிக்க லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, நிறுவனத்தின் அனைத்து மாடல்களின் விலையும் ரூ.15,000 முதல் ரூ.1 லட்சம் வரையில் உயரும் என்று இசுசூ தெரிவித்துள்ளது.
இசுசூ நிறுவனம் தற்போது ரூ.7.28 லட்சம் முதல் ரூ.28.3 லட்சம் வரையிலான வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
கடந்த மாதம், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் வாகனங்களின் விலையை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 4 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இசுசூ நிறுவனமும் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

More from the section

2018-ல் அதிகம் தேடப்பட்ட விவரங்களின் பட்டியலை வெளியிட்டது கூகுள்!
சக்திகாந்த தாஸ் நியமனம் தவறான முடிவு: சுப்ரமணியன் சுவாமி
கார்களின் விலைகளை உயர்த்துகிறது ரெனோ
சரிவிலிருந்து மீண்டது சென்செக்ஸ்: 190 புள்ளிகள் உயர்வு
பணியாற்றுவதற்கு உகந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்: முதலிடத்தில் அடோப்