செங்கல்பட்டு மதுரைவீரன் கோயிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்ப பூஜை

விஜயதசமியை முன்னிட்டு, செங்கல்பட்டில் அமைந்துள்ள மதுரைவீரன் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெறும் தசரா திருவிழாவில் 9ஆம் நாளான வியாழக்கிழமை இரவு
மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு அரிசியில் எழுத வைத்த பள்ளி ஆசிரியைகள்.
மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு அரிசியில் எழுத வைத்த பள்ளி ஆசிரியைகள்.


விஜயதசமியை முன்னிட்டு, செங்கல்பட்டில் அமைந்துள்ள மதுரைவீரன் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெறும் தசரா திருவிழாவில் 9ஆம் நாளான வியாழக்கிழமை இரவு குழந்தைகளுக்கு கல்வி தொடங்குவதற்கான வித்யாரம்ப பூஜை நடைபெற்றது. 
இக்கோயில் தசரா திருவிழாவையொட்டி கடந்த 9 நாள்களாக முப்பெரும் தேவியர் வடிவமான அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. ஆயுத பூஜை விழாவையொட்டி அம்மனுக்கு வியாழக்கிழமையன்று சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றன. சரஸ்வதி அலங்காரம் செய்யப்பட்ட பின் மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதையொட்டி குழந்தைகளுக்கு கல்வி தொடங்குவதற்கான வித்யாரம்ப பூஜை நடைபெற்றது. இதில், திரளான பெண்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக் குழுவினர், மதுரைவீரன் கோயில் தெருவில் உள்ள பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல், பெரியநத்தம் ஓசூரம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 
சரஸ்வதி அலங்காரம் குத்துவிளக்கில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, நாடு செழிப்பாக இருக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், தீய சக்திகள் அகன்று நல்லது நடக்கவும் கூட்டுப் பிரார்த்தனை, விளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. 
இதில் சுமங்கலிப் பெண்கள், கன்னிப்பெண்கள் ஆகியோர் கலந்துகொண்டு 108 திருவிளக்கு பூஜையை நடத்தினர். 
இந்த விழாவையொட்டி கல்விக்கருவிகள் வழங்கப்பட்டதோடு, அன்னதானமும் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர். 
மதுராந்தகத்தில்...
விஜய தசமியை முன்னிட்டு, மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளைச் சேர்க்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் முதன்மை முதல்வர் மங்கையர்க்கரசி முன்னிலை வகித்தார். பள்ளிக் குழுமத்தின் தாளாளர் டி.லோகராஜ் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 3 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியைகள் தட்டில் வைக்கப்பட்ட அரிசியில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியை நடத்தினர். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் திலகவதி தலைமையில் பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com