ராகி பயிரில் குலைநோய் தாக்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ராகி பயிரில் குலைநோய் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில்,
ராகி பயிரில் குலைநோய் தாக்குதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ராகி பயிரில் குலைநோய் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், இப்பயிரை காக்கும் முறைகளின் அவசியம் குறித்து ஒசூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
ஒசூர் வட்டாரத்தில் தற்போது மானாவாரி பயிராக 6,500 ஹெக்டேர் பரப்பளவில் ராகி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, ராகி பயிரில் பரவலாக குலைநோய் தாக்குதல் காணப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து, வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, குலைநோய் தாக்குதலிலிருந்து ராகி பயிரைக் காப்பது விவசாயிகளுக்கு அவசியமாகிறது.
நோய் தாக்குதலின் அறிகுறிகள்:
ராகி பயிரின் இலைகளில் சிறிய பழுப்பு நிற வட்டப் புள்ளிகள் தோன்றும். பின் பெரிய நீள் சுழல் வடிவப் பகுதியாக மாறி, இலைகள் காய்ந்து விடும். குலை நோயின் மூலமாகவே கதிர் காம்புகளில் அதிகம் சேதம் ஏற்படுகின்றன.
பின் கருப்பு நிறமாக மாறி விடும். நோய் தொற்றானது கதிர் பகுதி, அடித்தள கிளைப் பகுதி, தண்டுப் பகுதிகளில் ஏற்படுகிறது. நோய் தொற்று காரணமாக கதிர் பகுதி, பழுப்பு நிறமாக மாறி, முடிவில் பதராகிவிடும்.
உயிரியல் முறை: சூடோமோனாஸ் புளுரசல்ஸை லிட்டர் நீரில் 2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்பட்டவுடனே முதல் தெளிப்பைத் தெளிக்க வேண்டும். இரண்டாம் மற்றும் மூன்றாம் தெளிப்பை 15 நாள்கள் இடைவெளியில் பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும்.
சூடோமோனாஸ் புளுரசல்ஸை 2 கிராம் என்ற அளவில் கிலோ விதையை விதை நேர்த்தி செய்ய வேண்டும். கருவேல மர இலைச் சாறு, ஐப்போமியா கார்னியா இலைச் சாறு ஆகியவற்றை தெளிக்க வேண்டும். பூசண கலவையான (கார்பன்டசிம்-மேன்கோசெப்) 02. சதவீத செறிவு கொண்டதை இலை வழியாகத் தெளிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது தெளிப்பானது ஒரு லிட்டர் நீரில் 2 கிராம் சூடோமோனாஸ் புளுரசல் கரைசலை 10 நாள்கள் கழித்து தெளிக்க வேண்டும். 
டிரைக்ஷைகுளோசோலை (Tricyclazole)  2 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் தெளிப்பானுக்கேற்றவாறு கலந்து தெளிக்கலாம். அசாக்ஸிட்ரோபின் (Azoxyxtrobin) ) 2 மில்லி லிட்டர் என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிப்பானுக்கு ஏற்றவாறு கலந்து தெளிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com