வாட்ஸ்அப் வதந்தி: தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நலமுடன் இருப்பதாக கே.ஆர். விஜயா விளக்கம்

கேரளாவில் நடிகை கே.ஆர்.விஜயா விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாக வாட்ஸ் அப்பில் பரவிய வதந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை தான் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

தில்லியில் வடகிழக்குத் திருவிழா: 16ம் தேதி தொடக்கம்

தில்லி அரசின் ஏற்பாட்டில் வடகிழக்குத் திருவிழா வரும் 16-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இது குறித்து தில்லி சுற்றுலா அமைச்சர் கபில் மிஸ்ரா திங்கள்கிழமை கூறியதாவது:

புதுச்சேரியில் இந்திய திரைப்பட விழா: 16-ல் தொடக்கம் குற்றம் கடிதல் சிறந்த படமாக தேர்வு

புதுச்சேரி அரசு செய்தி, விளம்பரத்துறை, நவதர்சன் பிலிம் சொசைட்டி, அலையன்ஸ் பிரான்சிஸ் சார்பில் இந்திய திரைப்பட விழா  வரும் 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை புதுவை ருக்மணி திரையரங்கில் நடைபெறுகிறது. சிறந்த படமாக குற்றம் கடிதல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நட்பு என்றால் இப்படி இருக்க வேண்டும்: 21 லட்சம் பேரை வியக்க வைத்த விடியோ

அமெரிக்காவில் உள்ள மெட்ரோ ரிச்மண்ட் உயிரியல் பூங்காவில் சிறுத்தைக் குட்டியும், நாயும் நண்பர்களாக இணையும் விடியோ காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

பிரதமர் மோடியுடன் நேதாஜி  குடும்பத்தினர் இன்று சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை சுதந்திர போராட்டத் தலைவர் நேதாஜியின் குடும்பத்தினர் புதன்கிழமை சந்திக்கவுள்ளனர். இச்சந்திப்பின்போது 70 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் மாயமான நேதாஜியின் நிலை தொடர்பான ரகசிய கோப்புகளின் விவரத்தை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் பிரதமரிடம் கேட்டுக் கொள்வர் எனத் தெரிகிறது.

தமிழகம், புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு

தமிழகத்தின் தென் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஆங்காங்கே புதன்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு: அக்.19க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சென்னையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பொதுபணிமுறை பணியிடங்களுக்கு அக்.19க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.