திருமங்கலத்தில் மே 30 மின்தடை

திருமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சனிக்கிழமை (மே 30) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மதுரையில் ஆம்னி பேருந்துகளில் திடீர் சோதனை

மதுரையில் ஆம்னி பேருந்துகளில் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆம்னி பேருந்துகளில் அவசர காலத்தில் வெளியேற வசதியான கதவுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா எனும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பெண் புகார் எதிரொலி: காவல்துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம்

மதுரையில் பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு) வைரத்தை பணியிடை நீக்கம் செய்து மாநகர் காவல் ஆய்வாளர் சைலேஷ்குமார் யாதவ் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

சாலையில் செல்வோருக்கு கொடுக்கும் காற்று ஒலிப்பான்கள்

மதுரையில் இருசக்கர வாகனங்கள் முதல் பேருந்துகள் வரை 96 டெசிபலுக்கும் மேல் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களால்,  சாலையில் செல்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

கொலை வழக்கில் 2 பேர் கைது

மதுரையில் கிரிக்கெட் தகராறில் இளைஞர் கொல்லப்பட்டது தொடர்பாக 2 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: மதுரையில் அனைத்துப் பள்ளிகளும் நூறு சதவீதம் தேர்ச்சி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய பத்தாம் வகுப்புத் தேர்வில் மதுரையில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.